கடந்தவாரம் கனேடிய Automobiles துறைமீது அமெரிக்க அதிபர் Donald Trump 25% வரி விதித்ததை தொடர்ந்து கனேடிய சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. 4,500 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் தொழிற்சங்கம் இது தொடர்பில் கூறும் போது Automobiles துறையை முன்னெடுத்துச் செல்வதில் நிறைய சவால்கள் உள்ள போதும் அவற்றில் அமெரிக்காவின் கட்டணங்கள் பிரதான காரணமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
மொத்த Auto உற்பத்தி துறையையும் அமெரிக்காவிற்குள் நகர்த்தும் Trump இன் திட்டத்திற்கு எதிராக Automobiles துறையினரிடமிருந்து நீண்டகால அடிப்படையிலான நிலைத்தன்மை சார்ந்த உறுதிமொழிகளை பெற்றுக்கொள்ள தொழில்துறை அமைச்சர் Anita Anand முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் அதனடிப்படையில் அமெரிக்க நிறுவனங்களான Ford மற்றும் General Motors ஆகியவை தங்கள் கனடா தொழிற்சாலைகளை தொடர்ந்து இயங்க வைப்பதில் உறுதியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் Automobiles துறையின் நிலைபேற்றை உறுதி செய்ய அவர்களுடனான சந்திப்பு அடிக்கடி நிகழும் என தொழில்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார். இம்முறை மறுதேர்தலில் போட்டியிடும் Anita Anand ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டுள்ள Ford assembly அமைந்துள்ள Oakville East தொகுதியில் Liberal கட்சியில் சார்பில் போட்டியிடுகின்ற நிலையில் Automobiles நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்களைத் தொடர்வதற்காக செவ்வாய்க்கிழமை Windsor க்கு செல்லவுள்ளார்.
கனடாவில் Automobiles துறையை பராமரிக்க நிவாரணத் திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக Anand விளக்கினார். இது நமது உள்நாட்டு பொருளாதாரத்திற்கும் Automobiles தொழிலாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது. மேலும், கனடாவில் Automobiles துறையின் நீண்ட ஆயுளைப் பராமரிக்க நாம் அனைவரும் கைகோர்த்து செயல்படுவதுடன் தொழிலாளர்களுடனும் தொழில்துறையுடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம் என்றார்.