கனடா செய்திகள்

கனேடிய தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்தேர்தல்

கனடாவின் இறையாண்மைக்கு எதிரான அமெரிக்காவின் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறும் கனடாவின் பொதுத்தேர்தல் கனடாவில் இதுவரை நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் முக்கியத்துவம் வாய்ந்தது என பெரும்பாலான கனேடியர்கள் நம்புவதாக புதிய கணக்கெடுப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Ontario மற்றும் British Columbia மாகாணங்களில் இந்த நம்பிக்கை இன்னும் அதிகமானது என கணிக்கப்பட்டுள்ளது. கனேடியர்கள் தேர்தல் மற்றும் அவர்களுக்கு முன்னால் உள்ள தேர்வுகளில் தெளிவாக கவனம் செலுத்துபவர்கள் என Nanos Research இன் தரவு விஞ்ஞானி Nik Nanos தெரிவித்தார். இப்பொதுத்தேர்தலை பொறுத்தவரையில் கனேடியர்கள் கட்சிகள், கொள்கைகள் என்பவற்றுக்கு அப்பால் நல்ல தலைவரை தேர்ந்தெடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.

முன்னாள் பிரதமர் Justin Trudeau பதவியில் இருந்த காலத்தில் கனேடியர்கள் Conservative கட்சி தலைவர் Poilievre ஓர் அனுபவமிக்க அரசியல்வாதி என்ற அடிப்படையில் அவருக்கான ஆதரவு அதிகரித்தது. பின்னாளில் கனடாவுக்கு எதிரான Trump இன் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து கனடாவை வழிநடத்தக் கூடியவர் Carney என கனேடிய மக்கள் இனங்கண்டு கொண்டனர் அதனடிப்படையில் தற்போது Poilievre ஐ விட Carney இற்கான ஆதரவு அதிகரித்துள்ளதுள்ளதாக கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.

Related posts

உளவுத்துறை பணிக்குழு வரவிருக்கும் அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெளிநாட்டு தலையீட்டை கண்காணிக்கும்

admin

25 சதவீத வரியை குறைந்தது 30 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படுகிறது .

canadanews

பிலிப்பைன் சமூகத்தினரின் கலாச்சார விழாவில் அனர்தத்தம், 11 பேர் பலி.

canadanews