கனடாவின் இறையாண்மைக்கு எதிராகவும் உலகளாவிய ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் செயற்படும்
அமெரிக்காவின் கொள்கைகளைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கனேடிய நகரங்கள் பலவற்றில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டோர் Trump நிர்வாகத்தால் பேச்சு சுதந்திரம், ஜனநாயக ஒருமைப்பாடு மற்றும் கனேடிய சுதந்திரத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்தனர்.
Halifax இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் ஒரு மாநாட்டு மையத்திற்கு வெளியே நடந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். Debbie Baker என்ற Nova Scotia ஐ சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவர் எந்தவொரு பேரணியிலும் தான் பங்கேற்பது இதுவே முதல் முறை என்றும் இந்த வயதிலும் தான் எழுந்து நின்று ஏதாவது சொல்ல வேண்டிய நேரம் இது என்று நினைத்ததாகவும் உணர்வு பொங்க கூறினார்.
Atlantic Canada வுக்கான இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு NDP தலைவர் Jagmeet Singh உம் பேரணியில் கலந்துகொண்டிருந்தார். குறித்த பேரணி தொடர்பில் கருத்துரைத்த Manitoba முதல்வர் Wab Kinew எமது பிராந்திய மற்றும் தேசிய பெருமையைக் காட்டவும், கனடா ஒருபோதும் அமெரிக்க நாடாக இருக்காது என்ற செய்தியை அமெரிக்காவிற்கு எடுத்துரைக்கவும் கனடாவிற்கான இந்தப்பேரணியை ஏற்பாடு செய்ததாக கூறினார்.
ஆர்ப்பாட்டக்கார்கள் கனடா உட்பட ஏனைய நாடுகளை ஆளும் அமெரிக்க ஜனாதிபதியின் அச்சுறுத்தலை கண்டித்தது மட்டுமன்றி கனடாவின் சிவில் சேவைகள் சிலவற்றை சுத்திகரிக்க நினைக்கும் Elon Musk இன் திட்டங்களையும் கண்டித்தனர்.