கனடா செய்திகள்

வர்த்தகப் போரின் நடுவில் கனடாவுக்கான Trump இன் தூதர் உறுதிப்படுத்தப்பட்டார்.

கனடாவுக்கான புதிய அமெரிக்க தூதராக முன்னாள் Michigan காங்கிரஸ் உறுப்பினர் Pete Hoekstra என்பவரை அமெரிக்க செனட் உறுதி செய்துள்ளது. இவர் முன்னைய Trump நிர்வாகத்தின் போது Netherlands இற்கான தூதராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி Donald Trump இன் புதிய வரிவிதிப்புகளால் அமெரிக்க-கனடா உறவுகளில் ஒரு கடினமான காலகட்டத்தில் உள்ள நிலையில் Hoekstra ஓர் அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கனடா ஒரு அமெரிக்க மாநிலமாக மாற வேண்டும் என்று Trump பலமுறை கூறி வந்தாலும், கனடா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும் தெரிவித்துள்ள Hoekstra இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், கனடா அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க வர்த்தக பங்காளி மட்டுமன்றி மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு ஆதாரமாகவும், எரிசக்தி இறக்குமதியின் மிகப்பெரிய ஆதாரமாகவும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

வர்த்தக கூட்டாண்மையை மறுபரிசீலனை செய்து வலுப்படுத்தவும், எல்லைகளைப் பாதுகாக்கவும், fentanyl அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும், தேசிய பாதுகாப்பில் ஒத்துழைக்கவும் கனேடிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

கனடாவின் வருடாந்திர புதைபடிவ எரிபொருள் வெளியேற்றத்தை விட 2023 காட்டுத்தீ உமிழ்வுகள் நான்கு மடங்கு அதிகம்

admin

செப்டம்பரில் மொத்த விற்பனை அதிகரித்துள்ளதாகவும், உற்பத்தி விற்பனை குறைந்துள்ளதாகவும் கனடா புள்ளிவிவரங்கள் தெரிவிப்பு

admin

அக்டோபர் மாதத்தில் GDP உற்பத்தி 0.3% வளர்ச்சி – Statistics Canada தெரிவிப்பு

admin