அமெரிக்க ஜனாதிபதி Donald Trump சில வரிகளை 90 நாட்கள் இடைநிறுத்தி வைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன் சீனாவிற்கு எதிரான வரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 125 சதவீதமாக உயர்த்துவதற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இக்காலப்பகுதியில் (90 நாள்) 10% கணிசமாகக் குறைக்கப்பட்ட பரஸ்பர கட்டணத்தையும் உடனடியாக அமுல்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் X தளத்தில் கருத்து வெளியிட்ட கனேடியப் பிரதமர் Mark Carney வரிகளை இடைநிறுத்தும் Trump இன் தீர்மானம் உலகப் பொருளாதாரத்தில் வரவேற்கத்தக்க விடயம் என்றும் ஜனாதிபதி Trump உம் நானும் ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, அமெரிக்க ஜனாதிபதியும் கனேடிய பிரதமரும் கனடாவின் பொதுத் தேர்தலின் பின்னர் உடனடியாக ஒரு புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவர் என தெரிவித்தார்.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை அமெரிக்கா மீது அறிவித்த கட்டணங்கள் உடனடியாக நடைமுறைக்கு வராததால், அவர்கள் சீனாவைப் போன்று மேலும் பழிவாங்கும் வரிகளை எதிர்கொள்ளவில்லை என அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் Howard Lutnick தெரிவித்துள்ளார். இதைவிட வெளிநாட்டு தயாரிப்பு Automobiles வரிகள் மற்றும் March 12 முதல் அமுலுக்கு வந்த இரும்பு மற்றும் அலுமினியம் மீதான வரிகளும் ஏனைய சில வரிகளும் நடைமுறையில் உள்ளன.
அமெரிக்காவின் நிலையற்ற வரிக்கொள்கைகள் காரணமாக உலப்பொருளாதாரத்தில் பங்குச்சந்தை நிலவரங்கள் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களை பதிவு செய்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.