கனடா செய்திகள்

அமெரிக்கப் பயணங்களுக்கு பதிலாக ஏனைய நாடுகளை தெரிவுசெய்யும் கனேடியர்கள்.

பல்வேறு காரணங்களால் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது
எல்லையில் நடத்தப்படுகின்ற சிகிச்சை தொடர்பான அச்சங்கள், கட்டண அச்சுறுத்தல்கள் மற்றும் கனடாவை அமெரிக்காவுடன் இணைத்தல் தொடர்பில் எழுந்துள்ள வெறுப்புணர்வு போன்றன இதற்கு காரணமாக அமைந்துள்ளன.

அமெரிக்காவிலிருந்து காரில் வீடுதிரும்பும் கனேடியர்களின் எண்ணிக்கை March 2024 உடன் ஒப்பிடும் போது 32 சதவீதம் குறைந்துள்ளது. இதே போன்று அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் திரும்பும் பயணங்கள் ஆண்டுக்கு ஆண்டு 13.5 சதவீதம் குறைந்துள்ளன.

German மற்றும் Canada ஐ சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் சில கனடியர்களின் தெற்கு நோக்கிச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை குறைத்துள்ளது. கடந்த வாரம் அமெரிக்கவுக்கான தனது பயண ஆலோசனையை வெளியிட்ட Canada தனது பிரஜைகளை எல்லையில் சோதனையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் எச்சரித்திருந்தது.

இதேவேளை அமெரிக்காவுக்கான பயணங்களை குறைக்கும் கனேடியர்கள் ஏனைய நாடுகளுக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது கடந்த மாதம் ஆண்டுக்கு ஆண்டு ஒன்பது சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

பாலஸ்தீனியர்களுக்கான தற்காலிக விசா திட்டம் தொடர்பில் கனடா குடிவரவு அமைச்சர் வெளியிட்ட தகவல்.

Editor

மில்லியன் கணக்கான மோசடியாளர்கள் இருவர் கைது.

canadanews

Ruby Dhalla கட்சி விதிகள் பலவற்றை மீறியதாக கட்சியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

canadanews