அமெரிக்காவிற்குள் நுழையும் போது தொலைபேசிகள் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கனேடிய அரசாங்கம் எச்சரித்துள்ளது. எந்த காரணங்களும் இல்லாவிடினும் அமெரிக்க border agents இலத்திரனியல் சாதனங்களை பரிசோதிக்க உரிமையுள்ளவர்கள் என கனேடிய அரசாங்கத்தின் பயணிகளுக்கான புதிய எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனேடிய அரசாங்கம் வெளியிட்ட பயணக்குறிப்பில், முடிந்தளவு இலத்திரனியல் சாதனங்கள் கொண்டு செல்வதை குறைக்கும் படியும் முடிந்தால் தொலைபேசிகளை வீட்டிலேயே வைப்பது சிறந்தது எனவும் கூறியுள்ளது. மேலும் மடிக்கணினிகளை கொண்டு செல்லும் போது fingerprint அல்லது facial recognition போன்ற கடவுச்சொற்களுக்கு பதிலாக PIN அல்லது passcode முறையை பயன்படுத்துவது சிறந்தது எனவும் தகவல்களை சாதனங்களில் சேமிப்பதை தவிர்த்து cloud storage களில் சேமிப்பது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு வலைத்தளத்தின்படி, இரண்டு வகையான தேடல்கள் உள்ளன. எந்த தவறும் நடந்ததாக சந்தேகம் இல்லாத சந்தர்ப்பத்திலும் இத்தகைய சோதனையை மேற்கொள்ளலாம். அதாவது ஒரு அடிப்படை தேடலில் ஒரு அதிகாரி உங்கள் phone’s photos, emails, apps மற்றும் files போன்றவற்றை சோதனை செய்வார். அடுத்து மேலதிக சோதனைக்காக மேலதிகாரி ஒருவரின் ஒப்பத்துடன் உங்கள் தகவல்களை பிரதியெடுக்கவும் முடியும்.
தற்போதைய கொள்கையின் கீழ், அமெரிக்க எல்லை முகவர்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்ட தகவல்களை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள் cloud இல் வைக்கப்பட்டுள்ள எதையும் பார்க்க முடியாது. எனவே தொலைபேசியை on இல் வைத்திருக்க வேண்டியிருந்தால் அதை airplane mode இல் வைத்திருக்கலாம் அல்லது Wi-Fi மற்றும் cellular data என்பவற்றிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆனால் green card போன்ற அமெரிக்க குடியுரிமை உள்ளவர்கள் சாதனத் தேடல்களுக்கு சம்மதிக்க மறுத்ததற்காக அமெரிக்காவிற்குள் நுழைவதை மறுக்க முடியாது. வெளிநாட்டு பயணிகள் வேண்டாம் என்று சொன்னால் அவர்களை திருப்பி அனுப்பலாம். சோதனைக்கு நீங்கள் சம்மதிக்கவில்லை என்றால் அதிநவீன தாக்குதல்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான மற்றொரு வழி உங்கள் சாதனங்களை power off செயவதுதான் என வலியுறுத்தப்பட்டுள்ளது.