கனேடியர்கள் உட்பட அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் அமெரிக்க அரசாங்கத்தில் பதிவு செய்து அதனை தங்களுடன் எந்நேரமும் வைத்திருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனை மீறினால் அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் ஒரு குற்றம் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் Karoline Leavitt கூறினார்.
இந்த விதி 80 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தாலும் தற்போதுதான் அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்கா கூறுகின்றது. இருப்பினும் ஏனைய நாட்டினரைப் போலன்றி கனேடியர்கள் பதிவு செய்யும்போது fingerprinte எடுக்க வேண்டியதில்லை.
அமெரிக்காவிற்குள் நுழையும் போது I-94 வழங்கப்பட்ட ஒருவர் பதிவு செய்ய வேண்டியதில்லை அவர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒருவராக கணிக்கப்படுவார் ஆயினும் I-94 வழங்கப்படாதவர்கள் அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளில் online முறை மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பெரும்பாலானவர்கள் தங்கள் முவரியை உள்ளிடுவதில் குழப்பமடைந்துள்ளனர். அமெரிக்கா அல்லது கனடா இதில் எந்த முகவரியை உள்ளிடுவது? மற்றும் ஆவணங்களை PDF வடிவில் தொலைபேசியில் வைத்திருத்தல் போதுமானதா என்பது தொடர்பான கேள்விகளுக்கு அமெரிக்காவின் பதில், அச்சிட்டு உங்களுடன் எடுத்துச் செல்வதே சிறந்த நடைமுறை என்பதாகும்.
Trump நிர்வாகத்தை சமாதானப்படுத்தி இந்த நடைமுறையை இரத்துச் செய்வதற்கு Canadian Snowbird Association தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதுடன் இந்த விதி குறித்த சில தெளிவுகளும், படிவத்தில் சில மாற்றங்களும் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.