அதிகரித்து வரும் பணவீக்கம், பலவீனமான வேலைவாய்ப்பு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன் பரஸ்பர கட்டணங்களை குறைப்பதில் இருந்து பின்வாங்குதல் ஆகியவை பொருளாதார ஊக்கத்தின் வேகத்தை குறைத்துள்ளதால் Bank of Canada இந்த வாரம் அதன் விகிதக் குறைப்பு சுழற்சியை இடைநிறுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
ஜனாதிபதி Trump வரிகளை விதிப்பதும் திரும்பப் பெறுவதுமாக நிலையற்ற கொள்கையில் இருப்பதனால் கடந்த சில வாரங்களில் சந்தை பந்தயங்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்புகள் என்பன பல முறை போக்கை மாற்றியுள்ளன. இது பொருளாதாரத்தின் பாதைக்கான கணிப்புகளையும் அதன் விளைவாக பணவியல் கொள்கையையும் மிகவும் நிச்சயமற்றதாக மாற்றியுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.
கடந்த 10 மாதங்களில் மத்திய வங்கி அதன் முக்கிய கடன் செலவை 225 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 2.75 சதவீதமாக பேணியுள்ளது வட்டி விகிதத்தை அதன் நடுநிலை வரம்பின் நடுப்பகுதிக்குக் கொண்டு வந்தாலும் இந்த விகிதங்கள் பொருளாதார வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவோ அல்லது தூண்டவோ போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் Bank of Canada ஆளுநர் Tiff Macklem புதன்கிழமை காலை 9:45 மணிக்கு நிர்வாகக் குழுவின் முடிவையும், காலாண்டு பணவியல் கொள்கை அறிக்கையையும் வெளியிடவுள்ளார்.
சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப்போர் முழுமையான வர்த்தக போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் உலக வணிகத்தை பாதித்தது மட்டுமன்றி நுகர்வோர் செலவினங்களையும் பாதித்துள்ளது. இத்தகைய அழுத்தங்கள் இந்த வாரம் மீண்டும் விகிதங்களைக் குறைக்க Bank of Canada ஐ நிர்ப்பந்திக்ககூடும் என்று Macquarie Group இன் நிர்வாக இயக்குநரும் பொருளாதாரத் தலைவருமான David Doyle கூறியுள்ளார்.