Canadian Association of University Teachers வெளியிட்டுள்ள புதிய பயண ஆலோசனையின் படி தமது உறுப்பினர்களை அமெரிக்காவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கோரியுள்ளது. அத்துடன்
அமெரிக்க பயணம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சங்கம் கூறுகிறது.
இந்த எச்சரிக்கை குறிப்பாக திருநங்கைகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் அல்லது அவர்களின் ஆராய்ச்சி தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தின் நிலைப்பாட்டிற்கு முரணாகக் அமையலாம் என்று அடையாளம் காணும் கல்வியாளர்களுக்கும் இது பொருத்தமுடையது.
கூடுதலாக, எல்லையைக் கடக்கும்போது கல்வியாளர்கள் தங்கள் electronic device தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர். கனடா அரசாங்கமும் அண்மையில் தனது அமெரிக்க பயண ஆலோசனையைப் புதுப்பித்திருந்தது. அவற்றில் எல்லைக் காவலர்களிடமிருந்து விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்றும், நுழைவு மறுக்கப்பட்டால் தடுத்து வைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கனேடியர்களை எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பின் தரவுகளின்படி கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைவது சுமார் 32 சதவீதம் அல்லது 864,000 பயணிகள் குறைந்துள்ளது.
அரசியல் சோதனைகள் முடிவுக்கு வரும் வரையிலும் Electronic device இல் உள்ள இரகசிய தகவல்களுக்கு மதிப்பளிக்கும் வரையிலும் சங்கம் தனது எச்சரிக்கையை வைத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.