கனடா செய்திகள்

பல பில்லியன் டொலர் வாக்குறுதிகள் அடங்கிய Conservative தேர்தல் விஞ்ஞாபனம் எப்போது?

அண்மையில் வெளியிடப்பட்ட Liberal கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை Conservative கட்சி தலைவர் Pierre Poilievre தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது விமர்சித்து பேசினார். அதில் தாராளவாத அரசாங்கம் அதிகப்படியாக வாழ்க்கைச் செலவை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை வெளியிடப்பட்ட Liberal தலைவர் Mark Carney இன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள $130 பில்லியன் செலவுகள் மற்றும் முதலீடுகள் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்றும், இறுதியில் நுகர்வோர் அத்தியவசியப் பொருட்களுக்குச் செலுத்தும் செலவை மேலும் அதிகரிக்கும் என்றும் Poilievre கூறுகிறார்.

இதனிடையே March மாதத்தில் வருடாந்த பணவீக்க விகிதம் தேசிய அளவில் 2.3 சதவீதமாக சற்று குறைந்துள்ளதாகவும், உணவுப் பொருட்களின் விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் செவ்வாயன்று Statistics Canada வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில் கனடாவை மேலும் தன்னிறைவு பெறச் செய்வதற்கான முதலீடாக Liberal தலைவர் Carney தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ள நிலையில், தேர்தலுக்கு ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், Poilievre மற்றும் அவரது கட்சியினர் இன்னும் தாங்கள் அறிவித்த பல பில்லியன் டொலர் வாக்குறுதிகளுக்கு எவ்வாறு பணம் செலுத்துவார்கள் என்பதற்கான ஒரு வரைபை இன்னும் வெளியிடவில்லை, அவை விரைவில் வரும் என்று மட்டுமே கூறுகின்றனர்.

பிரித்தானிய வங்கியின் ஆளுநராக இருந்த காலத்தில் அங்கு Carney பெருமளவு பணத்தை அச்சிட்டதாக குற்றம் சாட்டும் Poilievre அந்நாட்டின் அண்மைய பணவீக்கத்திற்கும் Carney தான் காரணம் என்கிறார்.

NDP தலைவர் Jagmeet Singh பிரச்சாரத்தின் போது கனடாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விலையை நிறுவனங்கள் உயர்த்துவதைத் தடுக்க கடுமையான விதிகளை விதிக்கும் அதே வேளையில், அத்தியவசியப் பொருட்களின் விலையை குறைக்க உதவும் வகையில் NDP விலை வரம்புகளை அறிமுகப்படுத்தும் என்றார்.

Related posts

Francophonie உச்சிமாநாட்டில் Lebanese மந்திரியை Mélanie Joly சந்திக்கவுள்ளார்

admin

2025-இல் கனடாவின் பொருளாதாரத்தைக் காப்பாற்றிய வரி விலக்கு 2026-இல் ஆபத்தை எதிர்கொள்ளும்..?

canadanews

இரு தரப்பு உறவை வலுப்படுத்த முனையும் கனடா – சீனா.

canadanews