கனடா செய்திகள்

Pope Francis இன் இறுதிச் சடங்கில் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் ஆளுநர் நாயகம் Mary Simon.

முக்கியமான தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கும் இந்த நாட்களில் Pope Francis இன் இறுதிச்சடங்கில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என கூறிய பிரதமர் Mark Carney கனடாவின் பிரதிநிதியாக சனிக்கிழமை வத்திக்கானில் நடைபெறும் Pope Francis இன் இறுதிச் சடங்கில் கனடாவின் சார்பாக ஆளுநர் நாயகம் Mary Simon பங்கேற்பார் என்று தெரிவித்துள்ளார்.

ஆளுநர் நாயகத்துடன் செல்லும் கனடாவின் தூதுக்குழுவில் அவரது கணவர் Whit Fraser மற்றும் செனட் சபாநாயகர் Raymonde Gagné ஆகியோரும் இணைந்து கொள்வார்கள் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை St. Peter சதுக்கத்தில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் அமெரிக்க அதிபர் Donald Trump மற்றும் Ukraine ஜனாதிபதி Volodymyr Zelenskyy
உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த நிகழ்வில் Toronto வின் பேராயர் கர்தினால் Frank Leo உள்ளிட்ட கனடாவின் பல்வேறு ஆயர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுடன் Quebec இன் சர்வதேச உறவுகள் அமைச்சர் Martine Biron இறுதிச் சடங்கில் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.

கனடா 2023 ஆம் ஆண்டில், 2013 ஆம் ஆண்டு போப்பாண்டவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் அரிய நடவடிக்கையை மேற்கொண்ட pope emeritus Benedict XVI இன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவதற்காக கனடா தனது தூதரகப் பணித் தலைவரான Paul Gibbard என்பவரை Holy See இற்கு அனுப்பியிருந்தது. அதே போன்று 2005 ஆம் ஆண்டில், Pope John Paul II இன் இறுதிச்சடங்கில் கனடாவின் பிரதிநிதியாக அப்போதைய பிரதமர் Paul Martin மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் Stephen Harper ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடல் வழித்தடத்தின் ஊடாக காஸாவிற்கு மனிதாபிமான உதவி வழங்கும் முயற்சியில் கனடா இணைந்துள்ளது;

Editor

Copa America shootout இல் 4-3 என்ற கோல் கணக்கில் கனடா தோல்வியடைந்ததால் Uruguay மூன்றாவது இடத்தைப் பிடித்தது

admin

NDP மற்றும் Bloc ஆகியன Conservative நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்க மறுப்பதாக அறிவித்துள்ளன

admin