கனடா செய்திகள்

Pearson சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி.

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 30 வயதுடைய ஒருவரை காலை 7.00 மணியளவில் பொலிஸார் சுட்டுக் கொன்றனர், இதனால் விமான நிலையத்தின் மிகப்பெரிய முனையம் ஓரளவு மூடப்பட்டது என்று Special Investigations Unit (SIU) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, Terminal 1 இன் வெளியேறும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ந SUV ரக வாகனமொன்றில் குழப்பத்தில் இருந்த ஒருவரை பொலிஸார் விசாரித்தனர். அதிகாரிகள் அந்த குழுவுடன் சுமார் 10 நிமிடங்கள் பேசினர், அதில் இரண்டு அல்லது மூன்று பேர் ஒரு சர்ச்சையில் இருந்தனர். மிகப்பெரிய அளவிலான பதற்றத்தைத் தணித்த பின்னர் திடீரென்று நபர் ஒருவர் எங்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். பதிலுக்கு இரண்டு பொலிஸார் அவரை நோக்கி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர். பொலிஸார் எவரும் காயமடையவில்லை என Peel பிராந்திய பொலிஸ் தலைவர் Nishan Duraiappah கூறினார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபரை பொலிஸார் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற போது அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்ததாக அறிவிக்கப்பட்டது.

Terminal 1 வெளியேறும் பகுதிக்கான வீதி தற்போது மீண்டும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாக Pearson சர்வதேச விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை departures board இல் விமானங்களின் வருகை தாமதமாக காட்டப்பட்டன, பின்னர் பெரும்பாலான விமானங்கள் சரியான நேரத்தில் வருவதாகத் தெரியவருகின்றது.

Peel பிராந்திய பொலிஸாரின் தகவலின்படி குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஓர் தனிப்பட்ட விடயங்களுடன் தொடர்புபட்ட சம்பவம் எனவும் இதனால் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறினர். இருப்பினும், முனையத்தில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தாமதங்களை தவிர்ப்பதற்காக பயணிகள் வாகனங்களை Terminal 3, Viscount Station Kiss மற்றும் Fly lot ஆகிய இடங்களில் நிறுத்தி விட்டு Terminal 1 இற்கு ரயில் மூலம் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Terminal 1 எப்போது முழுமையாக மீளத்திறக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

பதவியை ராஜினாமா செய்வதற்கான அழுத்தம் காரணமாக Trudeau வெள்ளிக்கிழமை அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளார்

admin

கனடா அணுசக்தி எதிர்காலத்திற்கான வரைபடத்தை உருவாக்குகிறது – அமைச்சர் தெரிவிப்பு

admin

Bank of Canada இடமிருந்து விகிதக்குறைப்பை எதிர்பார்த்தாலும் அதன் வேகம் குறைவாகவே இருக்க வேண்டும்!

canadanews