கனடா செய்திகள்

நடைபெற்று முடிந்த கனடா பொதுத் தேர்தலில் மூன்று தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கனடா பொதுத்தேர்தல்தலில் Liberal கட்சி 49.0 சதவீத வாக்குகளைப் பெற்று 168 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் Conservative கட்சி 42.0 சதவீத வாக்குகளைப் பெற்று 144 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இத்தேர்தலில் Bloc Québécois (BQ) கட்சி 6.7 சதவீத வாக்குகளுடன் 23 ஆசனங்களையும், NDP கட்சி 2.0 சதவீத வாக்குகளுடன் 7 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளதுடன் Green Party 0.3 சதவீத வாக்குகளுக்காக ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.

இதேவேளை இப் பொதுத்தேர்தலில் இம்முறை ஆறு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். அவர்களில் Liberal கட்சி சார்பில் மூவரும், Conservative கட்சியி சார்பில் இருவரும், Green Party சார்பில் ஒருவரும் அடங்குவர். இவர்களில் Liberal கட்சி சார்பில் போட்டியிட்ட மூவரைத்தவிர ஏனைய மூவரும் தோல்வியை தழுவினர்.

Liberal கட்சிகளின் சார்பில் Oakville கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோருடன் Pickering–Brooklin தொகுதியில் போட்டியிட்ட ஜுனிதா நாதன் ஆகியோரே வெற்றி பெற்ற வேட்பாளர்களாவர்.

இவர்களைத் தவிர Conservative கட்சி சார்பில் களமிறங்கிய இரு வேட்பாளர்களான Markham Stouffville தொகுதியில் போட்டியிட்ட நிரான் ஜெயநேசன் மற்றும் Markham Thornhill தொகுதியில் போட்டியிட்ட லியோனல் லோகநாதன் ஆகியோருடன் Green Party சார்பில் Etobicoke வடக்கு தொகுதியில் போட்டியிட்ட சருன் பாலரஞ்சன் ஆகிய வேட்பாளர்கள் தோல்வியுற்றனர்.

Related posts

கனடா-அமெரிக்க எல்லை அருகில் விபத்து, புலம்பெயர்ந்தோர் குழுவை தேடும் பொலிசார்

canadanews

எரிபொருள் விலையும் குறையும் சாத்தியம்?

canadanews

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது அதே வரிகள் விதிக்கப்படும்: Canada

canadanews