கனடா செய்திகள்

கட்சித்தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார்-Jagmeet Singh.

British Columbia வில் உள்ள Burnaby Central இன் பொதுத்தேர்தல் தொகுதியில் தனது ஆசனத்தை தக்கவைக்க தவறியதால் NDP கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக Jagmeet Singh அறிவித்துள்ளார். இத்தேர்தலில் NDP கட்சி 2.0 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று 7 ஆசனங்களையே பெற்றுக்கொண்ட நிலையில் தேசிய அளவில் நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

தங்கள் வெற்றிக்காக போராடிய ஏனைய தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் NDP கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கண்ணீருடன் தெரிவித்த Singh கட்சியின் மரபுக்கு ஏற்ப வாழ கடுமையாக உழைத்ததாகவும் கூறினார். அரசியலுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தேர்ந்தெடுப்பது சில தியாகங்களுடன் தொடர்புடையது என்றும் அவர் தெரிவித்தார்.

தனது அரசியல் வாழ்கைக்கு உறுதுணையாக இருந்த தனது வாழ்கைத்துணையையும் இதன்போது அவர் நினைவு கூர்ந்தார். கடந்த வாரம் அளித்த பேட்டியொன்றில் Singh தனது கட்சிக்கான ஆதரவு குறைந்து வருவதையும், தனது சொந்த தொகுதியில் கடினமான போட்டி நிலவுவதையும் காட்டும் கருத்துக் கணிப்புகள் நம்பகமானவை அல்ல என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Israel-Hamas போரினை நிறுத்துவதற்காக Biden கூறிய திட்டத்தை Trudeau அங்கீகரிக்கின்றார்

admin

கனடா – சீனா இடையே வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பித்தது.

canadanews

Paris இல் நடைபெற்ற Paralympic போட்டியில் நீச்சல் வீரர் Nicholas Bennett கனடாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்

admin