கனடா செய்திகள்

Liberal கட்சியின் புதிய வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்ட Poilievre.

Conservative கட்சி தலைவர் Pierre Poilievre போட்டியிட்ட Carleton தொகுதியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நீண்டகாலமாக Ottawa வில் அவர் வகித்துவந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி முடிவுக்கு வந்துள்ளது. குறித்த தொகுதியில் Liberal கட்சியின் Bruce Fanjoy 3,700க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்துள்ளார்.

2004 முதல் Carleton தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் Poilievre 2021ஆம் ஆண்டு தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலில் தோல்வியடைந்தாலும் கட்சித்தலைவர் பதவியில் தான் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். Poilievre ஐ எதிர்த்து Carleton இல் போட்டியிட்ட Liberal கட்சியின் Fanjoy அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் தனது தேர்தல் பிரச்சாரங்களில் அதிக வீடுகளைக் கட்டுவதிலும் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வெற்றி பெற்றார்.

McGill University அரசறிவியல் துறை பேராசிரியர் Daniel Béland கூறுகையில் Poilievre கட்சி தலைவராக பதவி வகிக்க எந்த தடைகளும் இல்லை என்றாலும் அவர் விரும்பினால் Conservative கட்சிக்கு பாதுகாப்பான ஓர் தொகுதியை தெரிவு செய்து அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினரை பதவிவிலக வைப்பதன் மூலம் பாராளுமன்றத்திலும் அங்கம் வகிக்கலாம் என்றார்.

மறுமுனையில் Carney, 63.6 சதவீத வாக்குகளைப் பெற்று Nepean தொகுதியில் இலகுவான வெற்றியைப் பெற்றார். Conservative கட்சி வேட்பாளரான Barbara Bal இத்தொகுதியில் 33.4 சதவீத வாக்குகளையே பெற்றார். அதேபோன்று NDP தலைவர் Jagmeet Singh உம் British Columbia இன் Burnaby Central தொகுதியில் தோல்வியடைந்தார்.

Related posts

Pierre Poilievre இன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை Bloc Québécois ஆதரிக்காது

admin

Ottawa எரிபொருள் விலை சனிக்கிழமையன்று 6 சதங்கள் உயர்வு, ஒரே வாரத்தில் 15% அதிகரிப்பு.

canadanews

Liberals craft continental திட்டமாக Africa இல் ஏற்ப்பட்டுள்ள mpox இனைத் தடுக்க $1M உதவித்தொகையினை Joly அறிவித்தார்

admin