பொதுத்தேர்தலில் 68 சதவீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளது. இது 19.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை என Elections Canada கூறுகின்றது. இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரிக்கும் என்று ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டாலும், 1958 ஆம் ஆண்டு March இல் பதிவான சாதனையை இது தாண்டவில்லை, அப்போது வாக்களிக்க தகுதியுள்ள கனேடியர்களில் 79.4 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.
ஆனாலும், 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பின்னர் பதிவாகிய அதிகூடிய வாக்குப்பதிவு இதுவாகும் 1993 ஆம் ஆண்டில் அப்போது வாக்களிக்க தகுதியுள்ள கனேடியர்களில் 69.6 சதவீதமானோர் வாக்களித்தனர்.
தேர்தல் நாளில் 11 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குச் சாவடியிலோ அல்லது நீண்டகால பராமரிப்பு மையத்திலோ வாக்களித்ததாக ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன என்று Elections Canada கூறுகிறது. கிட்டத்தட்ட 7.3 மில்லியன் கனேடியர்கள் முன்கூட்டியே வாக்களித்ததுள்ளதுடன் 1.2 மில்லியன் பேர் சிறப்பு வாக்குச்சீட்டு மூலம் வாக்களித்துள்ளனர்.
இறுதி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மொத்த வாக்குகளில் 43.7 சதவீத வாக்குகளைப் பெற்று Liberal கட்சி169 இடங்களையும், Conservative கட்சி 41.3 சதவீத வாக்குகளுடன் 144 இடங்களையும் பெற்றுள்ளன. அதே நேரத்தில் Bloc Québécois மற்றும் NDP இரண்டும் தலா 6.3 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் முறையே 22 மற்றும் ஏழு ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.