கனடா செய்திகள்

திருடப்பட்ட 500 மதுபான போத்தல்களுடன் தமிழர் ஒருவர் கைது.

Toronto நகரில் நடத்தப்பட்ட சோதனையின் போது ​​சுமார் $30,000 பெறுமதியான கிட்டத்தட்ட 500 திருடப்பட்ட மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 66 வயதுடைய தமிழரான Vickneswararajah Mailvaganam என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Toronto பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற தெரு மற்றும் Wellesley தெரு கிழக்குப் பகுதியில் கடத்தலுக்காக திருடப்பட்ட சொத்தை வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலமே குறித்த மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டன. இந்த சந்தேக நபர் மதுபானம் கொள்வனவு செய்யும் ஓர் முகவரியும் பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனை நடத்தப்பட்ட நேரத்தில் $27,000 மதிப்புள்ள சுமார் 500 திருடப்பட்ட மதுபான போத்தல்கள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

கனடா Digital சேவை வரியை இரத்துச் செய்தமை ஓர் சிறிய வெற்றியாகும்.

canadanews

ஐ.நா. பொதுச் சபையில் கலந்து கொள்ளும் பிரதமர் உலகத் தலைவர்களை சந்திக்கின்றார்.

canadanews

Digital சேவை வரியை இரத்துச் செய்கிறது கனடா. மீண்டும் ஆரம்பிக்குமா பேச்சுவார்த்தை?

canadanews