கனடா செய்திகள்

ஏரியில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

இவ்வார தொடக்கத்தில் Bancroft பகுதியில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். Peterborough இன் வடகிழக்கே சுமார் 115 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Faraday ஏரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய Ontario மாகாணத்தின் Bancroft பகுதி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவத்தின் போது படகுக்குள் இருந்த ஒருவர் காணாமல் போயிருந்தார். மேலும் இரண்டு ஆண்கள் பாதுகாப்பாக கரைக்கு வந்துவிட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவசர மீட்பு பணியின் தேடலின் பின்னர் நீருக்கடியில் ஓர் உடலைக் கண்டு பிடித்தனர் அது படகிலிருந்து காணாமல் போன மூன்றாவது இளைஞனின் சடலம் என உறுதிப்படுத்தினர். சம்பந்தப்பட்டவர் Scarborough ஐ சேர்ந்த 19 வயதுடைய Rajkumar Rathusan என்ற இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த நேரத்தில் அவர் life jacket அணிந்திருக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். தண்ணீர் மிகவும் குளிராக இருப்பதால் விழுந்தால் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் அதனால் நீரில் இருக்கும் போது எந்நேரமும் PFD அல்லது life jacket அணிந்திருக்குமாறு Ontario மாகாண பொலிஸ் வலியுறுத்தியுள்ளது.

Related posts

லிபரல் கட்சி இரண்டு விவாதங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

canadanews

Trump இன் சில வரிகளுக்கு எதிரான தீர்ப்பு, கனடாவை முழுமையாக விடுவிக்கவில்லை.

canadanews

Toronto Pearson விமான நிலைய Screeners இனால் தற்காலிக ஒப்பந்தம் நிராகரிப்பு – வேலைநிறுத்தம் தொடரும் சாத்திம்

admin