கனடா செய்திகள்

செவ்வாய்க்கிழமை Trump ஐ சந்திக்கின்றார் Carney.

அடுத்தவாரம் கனேடிய பிரதமர் Mark Carney ஐ வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் Donald Trump புதன்கிழமை தெரிவித்தார். இரு தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளவுள்ளது. கடந்த செவ்வாயன்று தொலைபேசியில் இருவரும் உரையாடிய போது ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம் என Carney தன்னிடம் கூறியதாக அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் Carney இங்கிலாந்து மன்னர் Charles, Ukraine ஜனாதிபதி Volodymyr Zelenskyy மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் Antonio Costa ஆகியோருடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன்போது Ukraine இல் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகள் மற்றும் இந்த ஆண்டு கனடாவின் G7 தலைமைத்துவம் ஆகியவை குறித்து தானும் Carney யும் விவாதித்ததாக Zelenskyy கூறினார். அத்துடன் Ukraine பாதுகாப்பிற்கு கனடா அளித்த பங்களிப்புகளுக்கும் Zelenskyy நன்றி தெரிவித்துள்ளார்.

கனேடிய பிரதமர் தனது வெற்றி உரையில் Trump உடன் அமர்ந்திருக்கும்போது இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையிலான எதிர்கால பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உறவைப் பற்றி விவாதிப்பதாக இருக்கும் என்று கூறினார்.

தேர்தல் காலத்தில் Conservative மற்றும் Liberal கட்சிகள் அமெரிக்க ஜனாதிபதியின் வரி அச்சுறுத்தல்களை வெகுவாக விமர்சித்தார்கள் அதிலும் Conservative கட்சியினர் Trump நிர்வாகத்தை அதிகம் வெறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒருமுறை அமெரிக்க ஜனாதிபதி Carney ஐ மிகவும் நல்ல மனிதர் என்று விவரித்தார், மேலும் கனடாவுடன் சிறந்த உறவை வைத்திருப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இதனடிப்படையில் இரு தலைவர்களுக்குமிடையிலான அடுத்தவார சந்திப்பு குறித்து கனேடியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Related posts

Durham இல் இடைத்தேர்தல் – பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்!

Editor

அமெரிக்க வரி விதிப்புக்களால் பாதிக்கப்படும் கனடாவின் ஏற்றுமதி துறையும், பொருளாதாரமும்.

canadanews

கனேடியர்கள் அதிக கடனைச் சுமந்து கொண்டும் பணம் செலுத்தவில்லை: அறிக்கைகள்

admin