கனடா செய்திகள்

Pierre Poilievre இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை இராஜினாம செய்கிறார் Conservative, MP.

பிரதமர் Mark Carney விரைவில் இடைத்தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகக் கூறியதை அடுத்து, Pierre Poilievre இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Damien Kurek தனது இடத்தை விட்டுக்கொடுக்கிறார்.

இது தொடர்பில் Poilievre கூறும்போது, “Kurek தனது இடத்தை இராஜினாமா செய்ய முன்வந்ததை மனத்தாழ்மையுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொண்டேன்” என்றார்.

Kurek கருத்து வெளியிடும்போது, “எனக்கு வழங்கப்பட்ட ஆணை மாற்றம் தேவை என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. எங்கள் கட்சித் தலைவருக்கு இந்தப் பதவியை வழங்குவது அந்தச் செயல்பாட்டில் ஒரு முக்கியமான படியாகும்” என்று தெரிவித்தார். இதனிடையே தேர்தல் தோல்வியின் பின்னர் முதன்முறையாக Conservative களின் கட்சிக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.

Ottawa வின் Carleton தொகுதியில் 20 வருடமாக தக்கவைத்து வரும் தனது இடத்தை Liberal கட்சியின் புதுமுக வேட்பாளர் Bruce Fanjoy இடம் 4,300 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பறி கொடுத்தமையானது Poilievre க்கு குறிப்பிடத்தக்க ஏமாற்றம் என்றே கூறலாம். அவர் கட்சியின் தலைமை பதவியில் நீடித்தாலும், தனது தொகுதியை இழந்த பின்னர் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை இழந்துள்ளார். Poilievre தனக்கான ஒரு புதிய இடத்தைக் கண்டுபிடிக்கும் வரை கட்சியை பாராளுமன்றத்தில் வழிநடத்த ஒரு இடைக்காலத் தலைவரை நியமிக்க வேண்டிய நிலையில் Conservative கள் உள்ளனர்.

தமது அரசாங்கம் தொடர்பில் கூறிய பிரதமர் Carney, பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க தனது கட்சிக்கு நான்கு ஆசனங்கள் குறைவாக இருக்கின்ற போதிலும், NDP உடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

Related posts

கனடாவின் பெரும்பான்மையான குடியிருப்பாளர்கள் வரையறைகளிற்கு உட்பட்டு புலம்பெயர்ந்தோரை அனுமதிக்கின்றனர் – CityNews poll

admin

NDP மற்றும் Bloc ஆகியன Conservative நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்க மறுப்பதாக அறிவித்துள்ளன

admin

Latvia இல் கனேடிய வீரர் ஒருவர் off-duty இன் போது உயிரிழப்பு

admin