கனடா செய்திகள்

Conservative கட்சியின் தற்காலிக தலைவராகிறார் Andrew Scheer.

பாராளுமன்றத்தில் Pierre Poilievre அங்கம் வகிக்காத காரணத்தால், Conservative கட்சியை நாடாளுமன்றத்தில் வழிநடத்துவதற்காக கட்சியின் நாடாளுமன்றக் குழு Andrew Scheer ஐ தற்காலிக தலைவராக தேர்வு செய்துள்ளது.

Saskatchewan வின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கட்சித் தலைவருமான இவர், May 26 ஆம் திகதிக்கு பின்னர் தொடங்கும் அமர்வின் போது எதிர்கட்சி தலைவராக கடமைகளை பொறுப்பேற்று செயற்படவுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக Carleton தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய Poilievre கடந்தவாரம் பொதுத்தேர்தலின் போது தோல்வியடைந்தார்.

Poilievre இடைத்தேர்தலொன்றின் மூலம் Alberta தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்தில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சித் தலைவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட Damien Kurek பதவி விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவின் Haiti airlift ஆனது குடியிருப்புக்கள், உறவினர்கள் மற்றும் charter flight வசதிகளை கொண்டதாக விரிவாக்கப்படுகின்றது

admin

கனடா-ஐரோப்பா பாதுகாப்பு ஒப்பந்தம் திங்கட்கிழமை Brussels இல் கைச்சாத்திடப்படுகின்றது.

canadanews

கனடா மீது இன்னும் வரிகள் விதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

canadanews