கனடா செய்திகள்

வணிக உச்சி மாநாட்டில் பங்கேற்கும் கனடாவுக்கான அமெரிக்கத் தூதர்.

May 14 ஆந் திகதி தொடக்கம் May 16 ஆந் திகதி வரை Ottawa வின் National Arts Centre இல் கனேடிய வர்த்தக சபை [Canadian Chamber of Commerce] இந்த ஆண்டுக்கான G7 நாடுகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்களின் வருடாந்த B7 உச்சி மாநாட்டை நடத்துகிறது. இதில் முதல்முறையாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் Pete Hoekstra உத்தியோகபூர்வமாக கலந்துகொள்ளவுள்ளார்.

B7 உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் Hoekstra, May 16 அன்று உரையாற்றுவார் என்று கூறப்படுகின்றது.

April 15 ஆந் திகதி Washington இல் கனடாவுக்கான தூதராக நியமனம் பெற்ற Hoekstra, April 29 ஆந் திகதி ஆளுநர் நாயகம் Mary Simon இடமிருந்து தனது உத்தியோகபூர்வ நற்சான்றிதழையும் பெற்றார். இவர் முன்னைய Trump நிர்வாகத்தின் போது Netherlands இற்கான அமெரிக்க தூதராக பணியாற்றியதுடன் 2024 அமெரிக்கத் தேர்தலின் போது Michigan Republican Party தலைவராகவும் செயற்பட்டார்.

செவ்வாயன்று Trump மற்றும் Carney ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதும் Hoekstra கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Liberal கட்சி தலைமை பதவிக்கு Mélanie Joly போட்டியிடபோவதில்லை

admin

அமெரிக்க–கனேடிய உறவு குறித்து கனேடியர்கள் கவலை.

canadanews

கனேடிய முதல்வர்களை சந்திக்கின்றார் பிரதமர் Carney.

canadanews