April மாதத்தில் அமெரிக்காவிலிருந்து கனடாவில் வசிப்பவர்கள் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்பும் பயணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இது Trump நிர்வாகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க தயாரிப்புகள் மற்றும் பயணங்களைப் புறக்கணிக்கும் கனேடிய இயக்கத்தின் செயல்திறனைப் பிரதிபலிப்பதாக பேராசிரியர் ஒருவர் கூறுகிறார்.
சில பயணிகள் தடுத்து வைக்கப்படுதல் அல்லது கடுமையான எல்லை சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதால் பெரும்பாலானவர்கள் எல்லையைக் கடக்க அஞ்சுகின்றனர். இதனால் கனடியர்கள் தெற்கே பயணத்தைத் தவிர்க்கின்றமை பிரதான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
கனடாவில் வசிப்பவர்கள் அமெரிக்காவிலிருந்து Automobiles மூலம் திரும்பும் பயணங்களைப் பொறுத்தவரை, April மாதத்தில் இந்த எண்ணிக்கை 1.2 மில்லியனாகக் குறைந்துள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 35.2 சதவீதம் குறைவு. இது தொடர்ச்சியான சரிவுகளின் நான்காவது மாதமாக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவிற்கு எதிராகப் போராடுவதற்கான கனடாவின் நகர்வுகள் பயனுள்ளதாக இருக்கலாம் என Statistics Canada வின் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதுபற்றி கனடா-அமெரிக்க உறவுகளில் நிபுணரும் Toronto Metropolitan பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியருமான Ron Stagg கூறுகையில் அமெரிக்க மோதலால் சிலர் கவலைப்படவில்லை என்றாலும், கனடாவை Trump நிர்வாகம் நடத்துவதை எதிர்த்து கனேடியர்கள் தங்களுக்காக எழுந்து நிற்பதை StatCan கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுவதாக கூறுகிறார்.
அமெரிக்க வாக்காளர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பின் அளவை உணர்வதாலும், “buy Canadian” இயக்கம் அமெரிக்க பயணத்தை புறக்கணிப்பதாலும் 2026 அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலை கூட பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதேவேளை Trump இன் ஆட்சிக்காலம் முடிந்ததும் அமெரிக்காவிற்கான கனேடிய பயணம் மீண்டும் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.