கனடா செய்திகள்

TTC பேருந்து விபத்தின் சந்தேக நபரான தமிழ் இளைஞர் திருட்டு சம்பவங்களுடனும் தொடர்பு?

கடந்த November மாதம் TTC பேருந்துடன் மோதிய திருடப்பட்ட வாகனத்தில் இருந்ததாக கூறப்படும் சந்தேக நபர் Mississauga மற்றும் Brampton பகுதிகளில் உள்ள வீடுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர் Pickering பகுதியைச் சேர்ந்த 32 வயதான Anestan Ganeshamoorthy என்ற தமிழ் இளைஞராவார்.

2024 November 13, அன்று அதிகாலை 2:30 மணியளவில் Mississauga உள்ள Dundas Street West மற்றும் Mississauga Road இற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் ஐந்து சந்தேக நபர்கள் நுழைந்து முன் கதவு வழியாக வீட்டினுள் நுழைந்து வீட்டு உரிமையாளரின் Car சாவியைத் திருடி, வாகனத்தில் தப்பிச் சென்றதாக Peel பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது. அதே நாளில் அதிகாலை 3:45 மணியளவில் குறித்த சந்தேக நபர்கள் Brampton உள்ள Countryside Drive மற்றும் Goreway Drive அருகே உள்ள மற்றொரு வீட்டிற்குள்ளும் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்தும் பல பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். அத்துடன் மூன்றாவதாக Brampton உள்ள மற்றுமொரு வீட்டிலும் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் அதாவது 2024 November 18 அன்று North York இல் TTC பேருந்துடன் பல வாகனங்கள் மோதிய குற்றச்சாட்டுகளுக்காக Anestan பொலிஸ் காவலில் இருந்ததாக Peel பிராந்திய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த நேரத்தில், மொத்தம் ஒன்பது பேர் காயமடைந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். மோதிய நேரத்தில் திருடப்பட்ட வாகனத்தில் நான்கு பேர் இருந்தனர், அவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானார்கள், அதில் சாரதியான கணேசமூர்த்தியும் அடங்குவர். மற்ற இருவரும் சிறு காயங்களுக்குட்பட்டனர். பேருந்தில் பயணித்தவர்களில் சாரதி உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர் எனினும் உயிராபத்தான காயங்கள் இல்லை.

Related posts

யுத்தம் காரணமாக கனேடிய தூதர்களின் குழந்தைகள் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றம்

admin

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து கனேடிய நாடாளுமன்றத்தில் விவாதம்.

canadanews

அமெரிக்கப் பல்கலைக்கழகத்திடமிருந்து கௌரவப் பட்டத்தைப் பெற்றார் முதல்வர் Doug Ford.

canadanews