கனடா செய்திகள்

விரைவில் மீண்டும் நாடாளுமன்றம் திரும்ப தயாராகும் Pierre Poilievre.

Battle River -Crowfoot தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக Damien Kurek வியாழக்கிழமை Canada Gazette இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் Kurek பதவி விலகுவதன் மூலம் Pierre Poilievre எப்போது நாடாளுமன்றம் திரும்பலாம் என்பது குறித்து தற்போது Conservative கள் முடிவெடுத்திருப்பார்கள்.

மத்தியரசின் சட்டத்தின்படி Kurek தனது பதவி விலகலை சமர்ப்பிக்க 30 நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். பின்னர் சபாநாயகரிடம் உறுப்பினர் தனது பதவி விலகலை சமர்ப்பிப்பதன் அடிப்படையில், சபாநாயகர் வெற்றிடம் பற்றி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தெரிவிப்பார். இவ் அறிவித்தலையடுத்து அரசாங்கம் 11 முதல் 180 நாட்களுக்குள் இடைத்தேர்தலை நடத்தும்.

இடைத்தேர்தல் பிரச்சாரம் குறைந்தது 36 நாட்கள் நீடிக்கும் அதனால் Poilievre தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் August மாத ஆரம்பத்தில்தான் சாத்தியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Poilievre தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தலை தான் தாமதப்படுத்தப் போவதில்லை என பிரதமர் Carney ஏற்கெனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kurek இன் பதவி விலகல் அறிவிக்கப்பட்டால் 36 நாட்கள் தேர்தல் பிரச்சாரக் காலம் முடிவடைந்த பின்னர் அதாவது July 31 இன் பின்னர் வரும் திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடைபெறும் சிலவேளைகளில் August 4 ஆந்திகதி ஓர் விடுமுறை நாள் என்பதால் தேர்தல் August 5 ஆந்திகதிக்கு பின்தள்ளப்படலாம். Poilievre 2004 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக ஏழு தடவைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட Ottawa வின் Carleton தொகுதியில் இம்முறை Liberal ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காது Poilievre எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படவோ அல்லது விவாதத்தில் பங்கேற்கவோ முடியாது. தற்போது தற்காலிக தலைவராக முன்னாள் கட்சித்தலைவர் Andrew Scheer தேந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அடுத்த நாடாளுமன்றம் May 26 புதிய சபாநாயகரை தேந்தெடுப்பதன் மூலம் ஆரம்பிக்கவுள்ளது. மன்னர் Charles III May 27 ஆந் திகதி புதிய அரசாங்கத்தின் அரியணை சாசனத்தை நிகழ்த்துவார்.

Related posts

Ontarioவில் வீடு கட்டுமான பணிகள் உயர்ந்துள்ளன இருப்பினும் 1.5M இலக்கை அடைய வெகு தொலைவில் உள்ளது

admin

இந்த ஆண்டு திருடப்பட்ட 2,000 வாகனங்கள் Border agency இனால் மீட்பு

admin

பெரும்பான்மையை வென்ற New Brunswick Liberals, Susan Holt: மாகாணத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி

Canadatamilnews