அமெரிக்க அதிபர் Donald Trump அடுத்த மாதம் கனடாவில் நடைபெறும் G7 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் Karoline Leavitt உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி June15 முதல் 17 வரை கனடாவில் இருப்பார். அவரது வருகை குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று Leavitt கூறினார்.
May 6 அன்று, Mark Carney வெள்ளை மாளிகையில் Trump உடனான சந்திப்பின் போது, இரு தலைவர்களும் அடுத்த மாதம் Kananaskis இல் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்று குறிப்பிட்டிருந்தார். உச்சி மாநாட்டில் Ukraine ஜனாதிபதி Volodymyr Zelenskyy மற்றும் Australia பிரதமர் Anthony Albanese ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த வாரம் G7 நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர்களும் அதே போன்று உலக வங்கி குழு (WBG), சர்வதேச நாணய நிதியம் (IMF), பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) மற்றும் நிதி நிலைத்தன்மை வாரியம் (FSB) ஆகியவற்றின் தலைவர்களும் Alta வின் Banff நகரில் மூன்று நாள் உச்சிமாநாட்டில் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் கலந்துகொண்ட கனடாவின் நிதியமைச்சர் François-Philippe Champagne G7 உறுப்பு நாடுகளிடையே ஒற்றுமை உணர்வு இருப்பதாகக் கூறினார். இதன் சான்றாகவே கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினானர்.