கனடா செய்திகள்

பிரதமரின், தலைமை அதிகாரி பதவியை இராஜினாமா செய்கிறாரா Mendicino?

பிரதமர் Mark Carney யின் அலுவலக தலைமை அதிகாரி Marco Mendicino விரைவில் தனது பதவியை விட்டு விலகுவார் என கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் Justin Trudeau வின் அரசாங்கத்தின் கீழ் Toronto வின் முன்னாள் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரும் பொது பாதுகாப்பு அமைச்சருமாக செயற்பட்ட இவர், Carney, Liberal கட்சியின் தலைமை பதவியை வென்று March மாதத்தில் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், Carney கேட்டுக்கொண்டதற்கிணங்க இடைக்கால பிரதமர் அலுலகத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். எனினும் எதிர்க்கட்சிகள் இவரது Israel ஆதரவுக் கொள்கையை விமர்சித்து அவரை கட்டாயம் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி வந்தன.

Business Council of Canada வின் தலைவர் Goldy Hyder கனேடிய அரசியலில் ஒரு திருப்புமுனைப் புள்ளியில் Mendicino வகித்த பொறுப்பு முக்கியமானது என்றும் அவர் எப்போதும் பங்குதாரர்களுடன் சிறந்த உறவு நிலையை பேணியவராக செயற்பட்டார் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே Toronto வின் மாநகர முதல்வர் பதவிக்கு Mendicino போட்டியிடுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று Mendicino அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


2015 ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்ற அரசியலில் பல முக்கிய பதவிகளை வகித்து வந்த Mendicino கனேடிய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சிரேஷ்ட அரசியல்வாதியாக செயற்பட்டவர் ஆவார்.

Related posts

Freeland லிபரல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் காபன் விரி முறைமை மாற்றியமைக்கப்படும்.

canadanews

Bank of Canada வின் 3% சதவீத வட்டி விகிதக் குறைப்பை மேற்கொண்டுள்ளது.

canadanews

தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியதற்காக 3 Ontario வணிகங்களுக்கு அபராதம்

canadanews