கனடா செய்திகள்

Ottawa உட்பட 280 பணியாளர்களை குறைக்கும் CRA.

Canada Revenue Agency (CRA) நிறுவனம் இந்த வசந்த காலத்தில் (Spring Season) மேலும் 280 பணியாளர்களை குறைக்கின்றது. கடந்த ஆறுமாத காலப்பகுதிக்குள் மத்தியரசால் வெளியிடப்படும் பணியாளர் குறைப்பு தொடர்பான அறிவிப்பு இதுவாகும். இக்குறைப்பு நடவடிக்கை Ottawa மற்றும் Gatineau பகுதிகளிலே மேற்கொள்ளப்படவுள்ளது.

அண்மைய ஆண்டுகளாக COVID நிதியை நிறுத்துதல் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை மறு பரிசீலனை செய்தல் போன்ற பிரச்சினைகளை CRA எதிர்கொண்டுள்ளது. இந்தக் குறைப்புகள் பெரும்பாலும் உள்ளக சேவைகளைப் பாதிக்கின்றன. அவை முக்கியமாக தலைநகர் பிராந்தியத்தில் அமைந்துள்ளன. அத்துடன் CRA இன் பல கிளைகளையும் பாதிக்கின்றது.

CRA பணியாளர்களை சரிசெய்தல் நடவடிக்கையில் 2024 fall Season இல் இருந்து 3,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கியுள்ளது என்று கூறி, வரிவிதிப்பு ஊழியர் சங்கம் வேலை வெட்டுக்களுக்கு உடனடி தடை விதிக்குமாறு பிரதமரிடம் கோரியுள்ளது. இந்த நடவடிக்கை எங்கள் உறுப்பினர்களை கடுமையாக பாதிக்கின்றது. அத்துடன் அவை கனேடிய மக்கள்தொகை மற்றும் வணிகங்களையும் பெரிதும் பாதிக்கின்றன, என்று சங்கத்தின் தலைவர் Marc Brière ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட CRA யின் பணியாளர் மாற்றங்கள் நிறுவனத்தில் உள்ள 10 உள்ளக சேவைகளில் மேற்கொள்ளப்படவுள்ளது. இது CRA யின் சேவைகளை பெருமளவு பாதிக்கும் என தொழிற்சங்கம் குற்றம் சாட்டுகின்றது.

Related posts

நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு பதிலாக சுழற்சி வேலைநிறுத்திற்கு தயாராகிறது அஞ்சல் ஊழியர் சங்கம்.

canadanews

June மாத விற்பனை அதிகரித்துள்ள போதிலும் CREA இனால் 2024 இற்கான வீட்டுச் சந்தைக்கான முன்னறிவிப்பு குறைப்பு

admin

தமிழர் ஒருவரை உள்ளடக்கிய Ontario அமைச்சரவை நியமிக்கப்பட்டது

canadanews