Whitchurch-Stouffville இல் உள்ள ஓர் கடைத்தொகுதியொன்றில் நடந்த சம்பவத்தையடுத்து 30 வயதுடைய ஆண் ஒருவர் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Rougeview Avenue பகுதியில் May 23 ஆந் திகதியன்று கடையொன்றினுள் உடைமாற்றும் அறையில் யாரோ ஒருவர் இருந்ததாகவும், இதன்போது குறித்த அறையின் சுவருக்கு அடியிலிருந்து ஓர் தொலைபேசியின் மூலம் அவதானிப்பது கண்டறியப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் Jeron Nithiyanantharajah என்ற தமிழ் இளைஞராவார். இவர் மீது பாலியல் வன் கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் தகவல் தெரிந்தவர்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுள்ளனர்.
