2023 December, 02 ஆந் திகதி தொடக்கம் Ontario மாகாணத்தின் Liberal கட்சித் தலைவராக செயற்பட்டுவரும் Bonnie Crombie இவ்வாண்டின் இறுதியில் Toronto வில் நடைபெறும் கட்சியின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் தலைமைத்துவ மதிப்பாய்வை எதிர்கொள்வார்.
கடந்த February நடந்த மாகாணசபைத் தேர்தலில் 14 இடங்களை வென்று, ஏழு ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக Liberal கள் அதிகாரப்பூர்வ கட்சி அந்தஸ்தை மீண்டும் பெற்றுக்கொண்டனர். இருப்பினும், Mississauga East-Cooksville இல் முன்னாள் Mississauga நகர முதல்வரும் Brampton நகர முதல்வர் Patrick Brown இன் மாமியாருமான Silvia Gualtieri யிடம் போட்டியிட்டு Crombie தனது இடத்தை வெல்ல முடியவில்லை.
கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது, கட்சி 30 சதவீத மக்கள் வாக்குகளைப் பெற்றது, ஐந்து புதிய மாகாணசபை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தது. Conservative மற்றும் NDP இரு கட்சிகளையும் பின் தள்ளியது என்று Crombie சுட்டிக்காட்டுகிறார்.
March மாதத்தில் கட்சியின் நிர்வாகக் குழு Crombie கட்சித் தலைவராக நீடிப்பதை ஆதரிப்பதற்கு ஏகமனதாக வாக்களித்த போதிலும், September 12-14 ஆந்திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் card வைத்திருக்கும் Liberal களின் கருத்திலேயே Crombie யின் தலைமைப் பதவி நீடிப்பது தொடர்பான முடிவு தங்கியுள்ளது.
தலைமைத்துவ மதிப்பாய்வின் போது நீடிப்பதில் நம்பிக்கை உள்ளதா என்று Crombie இடம் வினவியபோது, “நான் எங்கள் பிராந்தியக் கூட்டங்களுக்குச் சென்று மிகவும் நேர்மறையான கருத்துக்களையே பெற்று வருகிறேன். அதனால் நான் தொடர்ந்து முன்னேற திட்டமிட்டுள்ளேன்” என்று பதிலளித்தார். அத்துடன் தான் நாடாளுமன்றத்தில் இடம்பிடிப்பதற்காக போட்டியிடப் போவதாகவும் அவர் கூறினார்.
