நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக கடந்த திங்கட்கிழமை கனடாவின் முதலமைச்சர்கள் பிரதமர் Mark Carney உடன் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட Ontario முதலமைச்சர் Doug Ford, கடந்த பத்தாண்டுகளில் தான் மேற்கொண்ட சிறந்த சந்திப்பு என்று கூறினார். இக்கருத்தானது முன்னாள் பிரதமர் Justin Trudeau வை மறைமுகமாக தாக்குவதாக அமைந்துள்ளது.
கனடாவை ஒரு எரிசக்தி வல்லரசாக மாற்றுவதற்கான முதலீட்டை ஊக்குவிக்கத் தேவையான உறுதிப்பாடு, நிலைத்தன்மை மற்றும் இலட்சியத்தை உருவாக்குவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று Carney மாநாட்டில் இறுதியில் கூறினார். இந்தக் கூட்டத்தில் கல்லில் எதுவும் செதுக்கப்படவில்லை என்று கூறிய Ford, மேலும், இந்தக் கூட்டத்தில் பிரதமர் குறிப்பிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பார் என்று தனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றும் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்கான ஒப்புதல்களை அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை விரைவுபடுத்துவதற்கான வாக்குறுதியளிக்கப்பட்ட சட்டத்தை மத்தியரசு Liberal கள் இன்னும் பாராளுமன்றத்தில் வெளியிடவில்லை. அது இந்த வார தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் மத்தியரசின் சட்டம் பழங்குடி மக்களுடன் அர்த்தமுள்ள ஆலோசனையை கட்டாயப்படுத்தும் என்றும், அதில் திட்டங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன, அவை எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதும் அடங்கும் என்றும் பிரதமர் கூறினார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட Alberta மாகாண முதல்வர் Danielle Smith புதிய குழாய் இணைப்புகளை உள்ளடக்காத எந்தவொரு திட்டமும் தனது மாகாணத்திற்கு பயனற்றது என்றும், புதிய குழாய் இணைப்புக்கான ஆதரவாளரைக் கண்டுபிடிப்பது அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும் என்றும், இந்த செயல்முறைக்கு ஒரு வாய்ப்பை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
