கனடா செய்திகள்

அமெரிக்காவின் உறவிற்கு மாற்றீடு தேடும் கனடாவின் G7 உச்சிமாநாடு..?

தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் கனடாவிற்கு முதல் முறையாக வருகை தரும் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஐ வரவேற்கும் விதமாக June 15 முதல் 17 வரை Alta வின் Kananaskis இல் பிரதமர் Carney, G7 உச்சிமாநாட்டை நடத்தவுள்ளார்.

இம்மாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரலை கனடா வெளியிட்டுள்ள நிலையில், இந்தியாவை உச்சிமாநாட்டிற்கு அழைக்கும் முடிவை அரசாங்கம் ஆதரிக்கிறது. மாநாட்டின் பிரதான நோக்கங்களாக, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல், வெளிநாட்டு தலையீடு மற்றும் நாடுகடந்த குற்றங்களை எதிர்கொள்ளுதல் அத்துடன் காட்டுத்தீயிற்கு எதிரான நடவடிக்கைகளை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும் என்று பிரதமர் அலுவலகம் கூறுகிறது.

மேலும் உச்சிமாநாட்டில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், முக்கியமான கனிமங்களுக்கான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை துரிதப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதில் கனடா கவனம் செலுத்தும் என்றும் அவரது அலுவலகம் கூறுகிறது.

இதைவிட, Ukraine இல் நீடித்த அமைதியை எவ்வாறு உறுதி செய்வது மற்றும் நம்பகமான கூட்டாளர்களுடன் கூட்டணிகளை உருவாக்குவது பற்றி விவாதிக்க G7 நாடுகளுக்கு வெளியேயும் விருந்தினர்களுக்கான அழைப்பைப் பயன்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் Vancouver அருகே நடந்த ஒரு படுகொலை தொடர்பில் இந்தியா – கனடா உறவில் சற்று விரிசல் நிலை ஏற்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது இந்தியப் பிரதமர் Narendra Modi க்கு தான் அழைப்பு விடுத்ததாக Carney வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அத்துடன் Ukraine, Australia, South Africa, Brazil, Mexico போன்ற நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

Trump இன் வரிகளுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிமன்றம், மேல்முறையீட்டிற்கு கால அவகாசம் அளித்துள்ளது.

canadanews

தலிபான்களின் பிடியிலிருந்து விடுபட்ட கனேடிய ஆயுதப்படை வீரர்

canadanews

வரவுசெலவுத்திட்டத்தின் முன்னுரிமைகள் குறித்து கனேடியர்கள் இருவேறு கொள்கைகளை கொண்டுள்ளனர்.

canadanews