கனடா செய்திகள்

G7 உச்சிமாநாட்டிற்கு இந்தியா அழைப்பு, நியாப்படுத்துகின்றார் Carney.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனேடிய நபர் ஒருவர் கொல்லப்பட்டதில் Modi யின் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ள போதிலும், இந்த மாத இறுதியில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் Narendra Modi க்கு பிரதமர் Mark Carney அழைப்பு விடுத்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் முக்கிய பங்கு வகிப்பதால் இந்தியாவை மேசையில் வைத்திருப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அவர் தனது அழைப்பை நியாப்படுத்தியுள்ளார். இருதரப்பு ரீதியாக, சட்ட அமுலாக்க உரையாடலைத் தொடர தற்போது ஒப்புக்கொண்டுள்ளோம். எனவே அதில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஆதலால் இந்தியப் பிரதமருக்கு தான் அழைப்பு விடுத்ததாக Carney கூறினார்.

இந்த அழைப்பிற்கு கனடாவின் உலக சீக்கிய அமைப்பு (World Sikh Organization of Canada) தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், உச்சி மாநாட்டிற்கு Modi ஐ அழைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி Carney க்கு கடிதம் எழுதியுள்ளது. குறித்த அமைப்பின் சட்ட ஆலோசகரும் செய்தித் தொடர்பாளருமான Balpreet Singh கூறும்போது, Modi க்கு அழைப்பு விடுத்துள்ளமையானது கனேடிய மதிப்புகளுக்கு Carney செய்த துரோகம் என வர்ணித்தார்.

இரண்டு ஆண்டுகளின் முன்னர் Hardeep Singh Nijjar படுகொலைக்கு அப்போதைய பிரதமர் Justin Trudeau நாடாளுமன்றத்தில் இந்தியாவை நேடியாக குற்றம் சாட்டிய போதும் Trudeau வின் குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் நிராகரித்ததுடன், கனடா Khalistani பயங்கரவாதிகளை ஆதரிப்பதாகக் கூறியது.

Nijjar இன் மரணம் குறித்த பதிலளிக்கப்படாத கேள்விகள் எஞ்சியுள்ள நிலையில், Modi ஐ அழைக்கும் அவரது முடிவு குறித்து கேட்டபோது, சட்ட நடைமுறை நடந்து கொண்டிருக்கும் போது ​​ஒரு தலைவர் அதைப் பற்றிப் பேசுவது ஒருபோதும் பொருத்தமானதல்ல என்று Carney பதிலளித்தார். இந்தியா G7 உறுப்பு நாடாக இல்லாத போதும், 2019 முதல் மாநாட்டை நடத்தும் நாடு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தீவிரமாக செயற்படும் கனடா.

canadanews

Morocco விற்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை எதிர்பார்க்கும் கனடா இரசிகர்கள்.

canadanews

மூன்று தொகுதிகளுக்கு April மாதம் இடைத்தேர்தல். பிரதமர் Mark Carney அறிவிப்பு.

canadanews