கனடா செய்திகள்

G7 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக British பிரதமர் Ottawa வருகின்றார்.

அடுத்த வாரம் Alberta வில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, British பிரதமர் Keir Starmer, இந்த மாதம் 14 முதல் 15 ஆந்திகதி வரை Ottawa க்கு வருகை தருவார் என்று பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த பயணத்திற்கான பயணத் திட்டம் இன்னும் வெளியிடப்படவில்லை.

கனடாவின் பிரதமராக தனது முதல் சர்வதேச பயணத்தின் போது Carney, March மாதம் லண்டனில் Starmer சந்தித்திருந்தார்.

ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உறவுகளை வலுப்படுத்த கனடா முயற்சிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் British பிரதமரின் வருகை இடம்பெறுவது உலகின் கவனத்தைய ஈர்த்துள்ளது.

அடுத்த வாரம் Alta வின் Kananaskis இல் தொடங்கும் G7 உச்சிமாநாட்டில் India, Ukraine மற்றும் Mexico எனப் பல உறுப்பினர் அல்லாத நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

Related posts

Liberal தலைமைக்கு போட்டியிட போவதில்லை என Finance Minister Dominic LeBlanc தெரிவிப்பு

admin

மத்திய கிழக்கிலிருந்து கனேடியர்கள் வெளியேறுவதற்கான வழிகளை அரசு ஆராய்ந்து வருகிறது – Anand.

canadanews

முதல்வர் Doug Ford இற்கு மிரட்டல், 20 வயது இளைஞர் கைது.

canadanews