Israel மற்றும் Iran இல் உள்ள கனேடியர்கள் அயல் நாடுகளை அடைந்தவுடன், அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு மத்திய அரசு உதவும் என்று வெளியுறவு அமைச்சர் Anita Anand வியாழக்கிழமை தெரிவித்தார். மேற்குக் கரையை விட்டு வெளியேறும் மக்களுக்கும் இது பொருந்தும் என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிராந்தியம் முழுவதும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளிலிருந்தும் வெளியேறிச் செல்பவர்கள் வீடு திரும்புவதற்கு உதவுவதற்காக இரு நாட்டு எல்லைகளிலும் உள்ள மறுபுறத்தில் தூதரக அதிகாரிகளை நிறுத்தியுள்ளது. பிராந்தியத்தை விட்டு வெளியேற விரும்பும் கனேடியர்களுக்கு உதவ நட்பு நாடுகளுடன் இணைந்து கூடுதல் தூதரக சேவைகளை வழங்கவுள்ளதாகவும் Anand தெரிவித்துள்ளார்.
கனேடியர்கள் உடனடியாக குறித்த பிராந்தியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறாரா என்று கேட்டபோது, அதற்கு பதிலளிக்காத வெளியுறவு அமைச்சர் வெளியேற விரும்பும் கனேடியர்களுக்கு நாங்கள் உதவுகிறோம், நாங்கள் உங்களுக்காக இங்கே இருக்கிறோம் என்று பதிலளித்தார்.
அத்துடன் இந்த பிராந்தியங்களில் உள்ள கனேடியர்கள் வீட்டிற்குச் செல்வதற்கான வழிகள் குறித்த பிந்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ள உலகளாவிய விவகாரங்களின் வெளிநாட்டு கனேடியர் பதிவு தரவுத்தளத்தில் [Global Affairs’ Registration of Canadians Abroad database] பதிவு செய்யுமாறு Anand வலியுறுத்துகிறார்.
இந்த வாரம் கனடா தனது குடிமக்களை Israel இற்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு வலியுறுத்தியதுடன், பல ஆண்டுகளாக Iran க்குச் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.