நாடாளுமன்றத்தில் முக்கிய சட்டமொன்றை நிறைவேற்றுவதற்காக வெள்ளிக்கிழமை சிறுபான்மை Liberal அரசாங்கத்துடன் இணைந்து Conservative நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
Bill C-5 அல்லது கனடிய பொருளாதாரச் சட்டம் என்று அழைக்கப்படும் இந்த சட்டம் தேசிய நலனுக்காகக் கருதப்படும் திட்டங்களை அடையாளம் கண்டு அரசாங்கம் அவற்றின் அனுமதிகளை விரைவாகக் கண்காணிக்க உதவுகின்றது. அமெரிக்க வரிகளுக்கு பதிலாக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு நடவடிக்கையின் ஓர் மையப்புள்ளியாக Liberal கள் இதை அழைத்துள்ளனர்.
இதுதான் எங்களை அமெரிக்காவிலிருந்து வேறுபடுத்துவதுடன் இதுதான் எங்களை அமெரிக்காவிலிருந்து மேலும் சுதந்திரமாக்குகிறது, அத்துடன் இதுதான் எங்களை முன்னோக்கி நகர்த்தப் போகிறது, என்றும் பிரதமர் Mark Carney வெள்ளிக்கிழமை மாலை சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். June 6 அன்று சபையில் அறிமுகப்படுத்தப்பட்ட குறித்த மசோதா செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சுமார் எட்டு மணி நேர குழு ஆய்வுக்குப் பின்னரே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் அவை நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளைத் தீர்மானிப்பதற்கும் இன்னும் முழுமையான உரையாடல்கள் தேவை என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உண்மையான வேலை இப்போதுதான் தொடங்குகிறது என்று பிரதமர் Carney மேலும் கூறினார்.
பிரதமர் தனது அரசாங்கம் மாகாணங்கள் அல்லது அவற்றை எதிர்க்கும் பிராந்தியங்களின் மீது திட்டங்களை திணிக்காது என்று கூறியுள்ளார். இந்த சட்டம், பழங்குடியினத் தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் குழுக்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அதாவது, இது மத்திய அமைச்சரவைக்கு ஏற்கனவே உள்ள சட்டங்களைத் தவிர்ப்பதற்கு அதிக அதிகாரத்தை அளிக்கிறது என அவர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.