கனடா செய்திகள்

அமெரிக்க உறவின் விரிசலால் ஐரோப்பாவை அதிகம் நாடும் கனடா.

ஐரோப்பிய ஒன்றிய-கனடா உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக Belgium சென்றுள்ள பிரதமர் Mark Carney ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களைச் சந்திப்பதற்கு முன்னர் 348 கனேடிய வீரர்கள் அடக்கம் செய்யப்பட்ட Antwerp Schoonselh இராணுவ கல்லறைக்குச் சென்றார்.

கனடாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கூட்டாண்மையின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்காகவே தற்போது Brussels இருப்பதாக Carney ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

Carney யும் அவரது குழுவினரும் மலர்வளையம் வைக்கும் நிகழ்வில் பங்கேற்றனர். குழுவில் வெளியுறவு அமைச்சர் Anita Anand , தேசிய பாதுகாப்பு அமைச்சர் David McGuinty மற்றும் கனடாவின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பாவிற்கான சிறப்பு தூதர் Stephane Dion ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் Antonio Costa மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் Ursula von der Leyen ஆகியோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை காலை சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த பிரதமர் Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump உடன் இரவு பேசியதாகவும் அந்த உரையாடல் மத்திய கிழக்கில் மோதலைத் தணிப்பதற்கான தேவை, பலமான NATO விற்கான கட்டமைப்பு மற்றும் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து இடம்பெற்றதாக குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றிய-கனடா உச்சிமாநாட்டில் கனடா ஒரு பாதுகாப்பு ஒப்பந்தமொன்றில் கைசாத்திடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது கனடாவிற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஆயுத வளங்களை பகிர்ந்து கொள்ளவும், ReArm Europe திட்டத்தில் கனடா இணைவதற்கான வழியை ஏற்படுத்தவும் திறவு கோலாக அமையும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவுடனான வரிகள் தொடர்பான உறவுகள் இறுக்கமடைந்ததாலும், ஜனாதிபதி Donald Trump கனடா ஒரு அமெரிக்க மாநிலமாக மாறுவது குறித்து மீண்டும் மீண்டும் பேசி வருவதாலும், பாதுகாப்பிற்காக அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதை நோக்காகவும் கொண்டே கனடாவின் சர்வதேச சந்திப்புக்கள் அமைந்து வருகின்றன.

Related posts

அமெரிக்காவின் வரிவிதிப்புக்கள் மிகப்பெரிய பலனைத் தருகின்றன.

canadanews

June 27 அன்று நடைபெறவுள்ள தேசிய பல் பராமரிப்புக்கு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் தகுதி உடையவர்கள்

admin

தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரம் மீதான வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி

canadanews