கனடா செய்திகள்

Canada Day கொண்டாட்டங்களால் ஒரே குடையின் கீழ் அணிதிரண்ட கனேடியர்கள்.

அமெரிக்க அச்சுறுத்தல்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் மேற்கத்தேய அந்நியப்படுத்தலுக்கு மத்தியில் Canada Day அன்று ஒற்றுமையைக் காட்ட கனேடியர்கள் செவ்வாயன்று நாடு முழுவதும் பூங்காக்கள் மற்றும் சதுக்கங்களில் திரண்டனர்.

நாங்கள் பிரிந்து போராட வேண்டாம், மாறாக ஒன்றிணைந்து கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளோம். ஏனென்றால் அதுதான் கனேடிய வழி என்று பிரதமர் Mark Carney, Ottawa வில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான கனேடியர்களிடம் கூறினார்.

இந்த உரையின் போது Bill C-5 பற்றி கருத்துரைத்த பிரதமர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பழங்குடி குழுக்கள் மற்றும் ஜனநாயக ஆதரவாளர்களிடமிருந்து சர்ச்சையை எதிர்கொண்ட போதிலும், Carney தனது அரசாங்கம் நிறைவேற்றிய சட்டம் பெரிய திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதை விரைவுபடுத்துவதற்கான சட்டம் என்பதை விளக்கினார்.

Toronto நகர மண்டபத்திற்கு முன்னால், நூற்றுக்கணக்கானோர் Nathan Phillips Square இல் முப்பரிமாண Toronto அடையாளத்தின் முன்னால் புகைப்படங்களை எடுக்க கூடினர், அதே நேரத்தில் நேரடி இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளையும் இரசித்தனர். Vancouver இலும் Canada Day கொண்டாட்டங்களின் போது நேரடி இசை நிகழ்ச்சிகள் களியாட்டங்கள் என சிறப்பான நிகழ்வுகள் நடைபெற்றன.

கனடாவை பெருமையாகக் காட்டுவதிலும் கனேடியர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி உலகிற்கு வெளிக்காட்டுவதிலும் அமெரிக்காவின் 51 வது மாநிலமாக மாற்றும் திட்டத்திற்கு எதிராக கோசமிடுவதிலும் Canada Day பெரும் பங்காற்றியது.

Related posts

தேர்தல் விவாதப் புறக்கணிப்பு, பசுமைக் கட்சியுடன் சமரசத் தீர்வை எட்டியது விவாத ஆணைக்குழு.

canadanews

Freeland இன் ராஜினாமாவைத் தொடர்ந்து Trudeau நிதியமைச்சராக LeBlanc இனை நியமித்துள்ளார்

admin

கனேடிய அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டமும் பாதுகாப்புத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

canadanews