வியாழக்கிழமை அதிகாலை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள சில விமான நிலையங்களில் தாமதம் ஏற்படக்கூடும் என்று கனடாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சேவை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலையில் Ottawa, Montreal, Edmonton, Winnipeg, Calgary மற்றும் Vancouver ஆகிய இடங்களில் இயல்பு நிலையை பாதிக்கும் வகையில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து NAV CANADA விற்கு தகவல் வழங்கப்பட்டது. என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விமான நிலையங்களில் உள்ள ஊழியர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என்றும், எங்கள் பல தளங்கள் வெளியேற்றப்பட்டதையும், அதிகாரிகளால் அச்சுறுத்தல் மதிப்பீடு செய்யப்பட்டதையும் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இடங்களில் சேவை படிப்படியாக மீண்டும் வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது என்றுமா NAV Canada வின் X தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
Montreal, Sûreté du Québec இற்கு காலை 7 மணியளவில் விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான அச்சுறுத்தல் அழைப்பொன்று வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பல சோதனைகள் செய்யப்பட்டதாகவும் இதுவரை சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விமான நிலைய செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுவதாகவும் இதனால் எந்தத் தடையும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரியொருவர் கூறினார்.