மோசமான வானிலை காரணமாக வீட்டுக் காப்புறுதி விகிதங்கள் அதிகரித்து வருவது குறித்து Ontario வின் நிதிச் சேவை ஒழுங்குமுறை அதிகாரிகள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் வெள்ளம் மற்றும் காட்டுத்தீ விகிதங்கள் கட்டுப்படியாகாத அளவிற்குத் செல்கின்றது. அத்துடன் சில வீட்டு உரிமையாளர்களை முற்றிலுமாக துண்டிக்கிறது. இந்த போக்கை ஒழுங்குமுறை அதிகாரசபை மேலும் ஆராய வேண்டும் என்று Ontario வின் Financial Services Regulatory Authority இற்கு (FSRA) ஒரு வழக்கறிஞர் குழு சமர்ப்பணம் செய்துள்ளது.
காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு நியாயமான சிகிச்சை கிடைப்பதை ஒழுங்குமுறை அதிகாரசபை உறுதிப்படுத்துகிறது. My Choice Financial Inc. நிறுவனத்தின் பகுப்பாய்வின் படி 2014 மற்றும் 2024 க்கு இடையில் Ontario வீட்டுக்காப்புறுதி விகிதங்கள் 84 சதவீதம் உயர்ந்த போதிலும் வெளிப்படைத்தன்மை காணப்படவில்லை. அதேவேளை இந்த தசாப்த காலப்பகுதியில் கனடாவின் ஒட்டு மொத்த விகிதங்களும் 76 சதவீதம் உயர்ந்துள்ளன. Statistics Canada வின் தகவலின் படி பண வீக்கம் 28 சதவீதமாக இருந்த போதிலும் இலாபங்கள் கிடைத்தமை விசேட அம்சமாகும்.
இதை விசாரிப்பது உண்மையில் FSRA இன் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது ஒழுங்குமுறை அதிகாரசபை உடனடியாக ஒரு பதிலை இதுவரை வழங்கவில்லை, இது வெறுமனே Ontario விற்கான மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை இல்லை என்பதால், Regulators இந்தப் போக்கை ஆராய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வெள்ள அனர்த்தம் தொடர்பான காப்புறுதியே மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளது. சில நேரங்களில் $10,000 முதல் $15,000 வரை செலவாகின்றது. இந்நிலையில், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் விகிதங்களின் போக்குகள் குறித்து காப்பீட்டுத் துறையே எச்சரிக்கை விடுத்து வருகிறது.