கனடா செய்திகள்

இடைத்தேர்தலில் ஆதரவை பெறும் நோக்கில் Alberta நிகழ்வில் கலந்து கொள்ளும் தலைவர்கள்.

கோடையின் மிகப்பெரிய அரசியல் மோதல்களில் ஒன்றான இடைத்தேர்தலில் ஆதரவைத் திரட்டும் நோக்கில், பிரதமர்  Mark Carney மற்றும் Conservative தலைவர் Pierre Poilievre ஆகியோர் இன்று Calgary Stampede இல் ஆதரவாளர்களை சந்தித்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு Stampede மைதானத்தில் நடந்து வந்த Carney இன்றயதினம் காலை உணவிலும் கலந்து கொள்ள உள்ளதுடன், பின்னர் ஒரு கட்சி நிதி திரட்டும் நிகழ்வை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. Carney முன்னர் chuckwagon பந்தயங்களிலும் கலந்துகொண்டார். அவர் மேடைக்கு வந்தபோது உற்சாக ஆரவாரங்களையும், ஆதரவையும் பெற்றார்.

Alberta வின் கிராமப்புற தொகுதியான Battle River-Crowfoot இல் இருந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் அங்கம் வகிப்பதற்காக தற்போது பிரச்சாரம் செய்து வரும் Poilievre ஒரு கட்சி நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

10 நாள் rodeo என்பது அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசியல்வாதிகளுக்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். இது பொது வெளியில் தோன்றவும், வாக்காளர்களுடன் கைகுலுக்கவும், நாடு முழுவதும் உள்ள ஆதரவாளர்களை சந்திக்கவும் வாய்ப்பளிக்கிறது.

Alberta முதல்வர் Danielle Smith மற்றும் Calgary மேயர் Jyoti Gondek ஆகியோர் வாரத்தின் தொடக்கத்தில் rodeo வில் குரல் கொடுத்து, Calgary நகர மையத்தில் அதிகாலையில் கூடியிருந்த கூட்டத்தின் முன் pancake இனை மறுபுறம் திருப்பினர்.

Related posts

Brampton இலுள்ள இந்து கோவிலில் ஏற்ப்பட்ட வன்முறை மோதலில் 3 பேர் கைது, 1 போலீசார் இடைநீக்கம்

admin

Toronto பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Geoffrey Hinton பௌதிகவியலிற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்

admin

கனடாவில் உள்ள சீக்கிய ஆர்வலர்களை மீது தாக்குதல் நடத்த உள்துறை அமைச்சர் உத்தரவிட்டதாக Ottawa இன் குற்றச்சாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது

admin