இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தனது இராஜதந்திர மற்றும் வர்த்தக அணுகுமுறையை Carney அரசாங்கம் வடிவமைத்துக் கொண்டிருக்கும் நிலையில், வெளியுறவு அமைச்சர் Anita Anand Japan மற்றும் Malaysia க்குச் செல்கிறார்.
பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை இருவரும் இறுதி செய்யும் நிலையில், இந்த வாரம் Tokyo வில் தனது Japan பிரதிநிதியை Anand சந்திக்கவுள்ளார். அத்துடன் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், Malaysia வில் Association of South East Asian Nations சந்திப்பிலும் வெளியுறவு அமைச்சர் பங்கேற்கவுள்ளார்.
இந்த ஆண்டு ASEAN கூட்டமைப்போடு ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கனடா திட்டமிட்டுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டில் அந்த கூட்டமைப்போடு ஒரு மூலோபாய கட்டமைப்பில் இணைந்து கொண்டது. இது வணிக விரிவாக்கம், கல்வி பரிமாற்றங்கள் மற்றும் உயிரியல் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடும் திட்டங்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தான் பதவியேற்ற முதல் மாதங்களில் ஐரோப்பிய நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளில் அதிக கவனம் செலுத்திய பிரதமர் Carney, Arctic radar system இற்காக Australia உடனும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்தோ-பசிபிக் உத்தியை 2022 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் Justin Trudeau வின் அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது. இது சீனாவை சார்ந்திருப்பதை தவிர்ப்பதற்கான உத்தியாக கையாளப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச வர்த்தகத்திலிருந்து விலகிச் செல்வதால் தற்போது, உலக நாடுகளின் கனடா மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
