கனடா செய்திகள்

நான்கு தடவைகள் அபராதம் விதிக்கப்பட்ட Conservative முகவர்.

Conservative கட்சியின் முகவராகப் பணியாற்றியதற்காக ஒரு கணக்காளருக்கு எதிராக நான்கு அபராதங்களை விதித்த தேர்தல் ஆணையாளர் மொத்தமாக 4,500 டொலர்களை தண்டமாக விதித்துள்ளார். அவர் தனக்கு வழங்கப்பட்ட அபராதத்தை அலட்சியப் படுத்தியதால் வழங்கப்பட்ட அபராதங்கள் இரட்டிப்பாக அல்லது மும்மடங்காக அதிகரித்ததாக கனடா தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

William Healy ஒரு துறைதேர்ந்த கணக்காளர் மட்டுமன்றி அரசியல் நிதி தொடர்பில் விரிவான அனுபவமும் கொண்டவர். இவர் 2004 மற்றும் 2021 க்கு இடையில் 100 க்கும் மேற்பட்ட பல்வேறு தேர்தல் பிரச்சாரங்களின் அதிகாரப்பூர்வ முகவராக இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தமாக $9,080 மதிப்புள்ள 12 செலுத்தப்படாத நிலுவைகள் தொடர்பாக, அவற்றை செலுத்தத் தவறியதற்காகவும், புதுப்பிக்கப்பட்ட நிலுவை தொடர்பான அறிக்கையை வழங்கத் தவறியதற்காகவும் Healy க்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்ற விதி மீறல்களுக்கு Healy பழகிப்போன பல. வரலாற்றைக் கொண்டுள்ளார் என்று ஆணையாளர் கூறினார்.

Canadian Press இது தொடர்பில் பதிலை பெற்றுக்கொள்ள Conservative கட்சியினரை தொடர்பு கொண்ட போதும், பதில் எதுவும் கிடைக்கவில்லை. வியாழக்கிழமை, தேர்தல் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், July மாதத்தில் பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 11 அபராதங்களை விதித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த அபராதங்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. Healy யின் அபராதங்கள் மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டதாகும்.

Related posts

Newmarket இல் துப்பாக்கிகள், போதைப்பொருள்கள் போலீசாரால் கைப்பற்றல் – 3 சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு

admin

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்து சிந்திக்க ஆரம்பிக்கும் கனேடியர்கள்.

canadanews

Liberals அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தை தீர்மானிக்கவுள்ள வரவுசெலவுத்திட்டம் நிறைவேற்றப்படுமா?

canadanews