அடுத்த மாதம் கனேடியப் பொருட்களுக்கு 35 சதவீத வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் Donald Trump அறிவித்துள்ள நிலையில்
இந்த அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க பிரதமர் Mark Carney தனது அமைச்சரவை மற்றும் கனடாவின் மாகாண முதல்வர்களை சந்திக்கவுள்ளார்.
கனடா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்க செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டமும் Ontario வின் Huntsville நடைபெறும் கூட்டமைப்பு கவுன்சிலின் வருடாந்த மாநாட்டிற்காக July 22 ஆம் திகதி மாகாண முதல்வர்களையும் Carney சந்திப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை தனது அரசாங்கம் தொழிலாளர்களையும், வணிகங்களையும் உறுதியாக பாதுகாக்கும் என்று Carney கூறினார்.
வர்த்தகப் போரின் எதிர்மறை விளைவுகளை கட்டுப்படுத்த தனது அரசாங்கம் எடுத்துள்ள பல நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய பிரதமர், எல்லையைத் தாண்டிய fentanyl போதைப்பொருளை கட்டுப்படுத்துவதிலும் கனடா கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறினார். அமெரிக்காவிற்குள் fentanyl வருவதை தடுக்க கனடா செயற்பட்டால், கட்டணங்களை சரிசெய்தல் குறித்து பரிசீலிக்கலாம் என்று Trump கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை அதன் பொருளாதாரத்திற்கும், தேசியப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறினார். சந்தை மதிப்பை விடக் குறைவான விலையில் கனேடிய எண்ணெயை அமெரிக்கா இறக்குமதி செய்வதால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை பிரதானமாக தூண்டப்படுகின்றது.
