கனடா செய்திகள்

கனடாவின் முக்கிய திட்டங்கள் பற்றி First Nations தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு.

வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான First Nations தலைவர்களைச் சந்தித்தபோது, Liberal களின் முக்கியத் திட்டங்களின் சட்டம் குறித்து ஒருமித்த கருத்தைக் காண்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் Mark Carney கூறினார். ஆனாலும், பிற்பகல் வேளையில் உச்சிமாநாட்டின் நடுப்பகுதியில் சில தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர். பல வாரங்களாக அவர்கள் எழுப்பி வரும் கவலைகளுக்கு இது போதுமான பதில் இல்லை என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கூட்டத்தின் முடிவில், சில தலைவர்கள் எச்சரிக்கையுடன் அதேநேரம் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினர். அத்துடன், பழங்குடியினரை எதிர்கொள்ளும் துறைகளுக்கான கூட்டாட்சி நிதியில் ஏற்படக்கூடிய வெட்டுக்கள் குறித்து மற்றவர்கள் தொடர்ந்து கவலை கொண்டுள்ளனர். அவர்கள் கூறுகையில், பழங்குடியினரை எதிர்கொள்ளும் துறைகளுக்கான கூட்டாட்சி நிதியில் ஏற்படக்கூடிய வெட்டுக்கள் தங்கள் சமூகங்களை மோசமாக்கும் அத்தோடு திட்டங்கள் முன்னோக்கி நகர்த்துவதையும் பலவீனப்படுத்தும் என கூறுகின்றனர்.

இச்சந்திப்பின் போது கலந்து கொண்ட தலைவர்களுள் ஒருவரான Diabo கூட்டத்தை “ஒரு முகமூடி” என்று அழைத்தார். அரசாங்கம் தனது திட்டத்தை ஆதரிக்கும் மக்களைச் சேகரிக்க முயற்சிப்பது போல் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

இச்சந்திப்பு குறித்து பிரதமர் Carney கூறும்போது, குறிப்பிட்ட திட்டங்களில் ஆலோசனைகள் தொடங்கியவுடன், மீண்டும் மீண்டும் செற்படுவதன் மூலம் அரசாங்கத்திற்கும் First Nations இற்கும் இடையிலான நம்பிக்கை படிப்படியாக மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வழிவகுக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

தொழிலாளர் தினத்தன்று, வளர்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் பணிகளை வழிநடத்தும் முக்கிய திட்ட அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பழங்குடி ஆலோசனைக் குழு என்பன அமைக்கப்படும் என்று தான் நம்புவதாக Carney அறையில் இருந்த தலைவர்களிடம் கூறினார்.

அரசாங்கம் எவ்வாறு முன்னேறுவது என்பது குறித்து First Nations தலைவர்களிடமிருந்து ஒருமித்த கருத்தைப் பெற முடியும் என்று பிரதமர் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதுடன் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லையெனின் உரையாடலைத் தொடரவும் உறுதியளித்தார்.

Related posts

கனடாவின் மென்மரங்களுக்கான வரிகளை 35% ஆக அதிகரித்த அமெரிக்கா.

canadanews

தேர்தல் களங்களில் லிபரல் தலைமைத்துவ வேட்பாளர்கள் அள்ளி வழங்கும் பாதுகாப்பு உறுதிமொழிகள்

canadanews

இந்த வாரம் ASEAN உச்சிமாநாடு மற்றும் உக்ரைன் பாதுகாப்பு கூட்டங்களுக்கு Trudeau செல்கின்றார்

admin