Alberta வின் Battle River-Crowfoot தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு கிட்டத்தட்ட 80 சுயேச்சை வேட்பாளர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அடுத்த மாதம் வாக்களிக்கச் செல்லும்போது தெரிவு செய்வதற்கு ஏராளமான வேட்பாளர்களைக் கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வாக்குச்சீட்டில் United Party of Canada candidate, Libertarian Party of Canada candidate, Christian Heritage Party of Canada candidate மற்றும் Conservative தலைவர் Pierre Poilievre ஆகியோர் உள்ளடங்குவார்கள்.
கடந்த தேர்தலின் போது Poilievre யின் போட்டியில் இதே முயற்சியை மேற்கொண்ட Longest Ballot Committee என்ற இயக்கத்திற்கு தற்போது அதைவிட பெரிய வாக்குச்சீட்டு கிடைத்துள்ளது. இந்தக் குழு தேர்தல் முறையை எதிர்ப்பதே தங்கள் குறிக்கோள் என்று கூறுகிறது.
மத்திய Alberta-Saskatchewan எல்லையிலிருந்து மாகாணத்தின் தெற்குப் பகுதிகள் வரை நீண்டுள்ள பகுதியில் வசிப்பவர்கள் August 18 அன்று நடைபெறும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாக்களிப்பார்கள்.
கனடாவில் Conservative செல்வாக்குப் பெற்ற தொகுதிகளில் Battle River-Crowfoot மிகவும் சாதகமான தேர்தல் தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது Poilievre வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது.
வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான காலம் July 28 அன்று முடிவடைகின்றன. இதனடிப்படையில் வேட்பாளர்களின் முழுமையான பட்டியல் July 30 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
