கனடாவிற்குள் வரும் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தை Ottawa முன்னெடுத்தால், தாம் திவால்நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என வாதிட்டு, Quebec வணிக உரிமையாளர்கள் குழு ஒன்று இந்த மாதம் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக $300 மில்லியன் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
இரும்பு பொருட்கள் முதல் குளிர்கால jacket மற்றும் விமான பாகங்கள் வரை அனைத்தையும் தயாரிக்கும் 23 வணிக நிறுவனங்களின் தலைவர்கள் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் அவசியம் என்று கூறுகிறார்கள்.
Ottawa அனுமதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அழுத்தம் கொடுத்து வருவதால், முதலாளிகள் வருத்தமடைந்துள்ளனர். 2021 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் மத்திய அரசு. அந்த நிறுவனங்களுக்கு நீங்கள் விரும்பும் அளவுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்கலாம் என்று கூறியிருந்தது, என்று வணிக உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் Frédéric Bérard கூறினார். திடீரென அவர்கள் முடிவை மாற்றி அதை மறந்துவிடுங்கள் நாங்கள் விதிகளை மாற்றுகிறோம் என்று கூறுவது வருத்தமளிப்பதாக கூறுகின்றார்.
கனடா இவ்வளவு பெரிய தற்காலிக குடியேற்றத்தைத் தாங்க முடியாது என்று வாதிடும் Quebec மற்றும் சில conservative அமைப்புகளின் அதிகரித்து வரும் அழுத்தத்திற்குப் பின்னர் மத்திய அரசாங்கம், நமது பொருளாதாரத்தின் சில முக்கிய பகுதிகளைக் கொலை செய்து வருகிறது என்று Bérard மேலும் கூறினார்.
300,000 தற்காலிக குடியேறிகளால் 300,000 கூடுதல் மக்கள் அதிகரிப்பைக் எதிர்கொண்டுள்ளோம். எனவே இது சேவைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று Quebec மாகாண முதல்வர் François Legault, October இல் கூறினார்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த தொழிலாளர் நெருக்கடியானது தீவிரமான பிரச்சினை எனவும் இதனால் தங்கள் தொழில் மற்றும் நிதி வீணாக இழக்கப்படுவதாக கூறும் பாதிக்கப்பட்ட வர்தக நிறுவனங்கள் இதற்கு மத்தியரசு உடனடியாக தீர்வினை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.
