கனடா செய்திகள்

கனடா உட்பட்ட சில பயணிகளைப் பாதிக்கவுள்ள அமெரிக்காவின் புதிய விசா நடைமுறைகள்.

கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு பயணிக்கும் சிலர் 250 அமெரிக்க டொலர் “visa integrity fee” செலுத்த வேண்டியிருக்கும், ஆனாலும் பெரும்பாலான கனேடிய குடிமக்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று ஒரு குடியேற்ற வழக்கறிஞர் கூறுகிறார்.

இது கனேடிய குடிமக்களை அதிகம் பாதிக்காது, அவர்கள் வழக்கம் போல் அமெரிக்காவிற்குள் தொடர்ந்து நுழையலாம் என்று New York இன் Buffalo வில் உள்ள Berardi குடிவரவு சட்டத்தின் நிர்வாக கூட்டாளியான Rosanna Berardi கூறினார். கனேடிய குடிமக்கள் பொதுவாக அமெரிக்காவிற்குள் நுழைய தங்கள் கடவுச்சீட்டை மட்டுமே வைத்திருந்தால் போதுமானது. கனேடிய குடிமக்களில் 99 சதவீதம் பேர் விசா விலக்கு பெற்றவர்கள் அவர்கள் முதலீட்டாளர்களாகவோ அல்லது அமெரிக்கர்களின் வருங்கால வாழ்க்கைத்துணையாகவோ இல்லாவிட்டால். புதிய visa integrity fee ஐ செலுத்த வேண்டியதில்லை.

அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் அல்லது விசா விலக்களிப்பு திட்ட நாடுகளில் பிறக்காதவர்கள் மற்றும் கனேடிய நிரந்தர குடியிருப்பாளர்கள் குடியேற்ற நோக்கமற்ற அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது இந்தக்கட்டணம் பொருந்தும் என்று Berardi மேலும் கூறினார். விசா தள்ளுபடி திட்டத்தின் மூலம் செல்லுபடியான பயண அங்கீகாரத்திற்கான மின்னணு அமைப்பைக் கொண்டவர்கள், அமெரிக்க அரசாங்கத்தின் website தகவலுக்கமைய சுற்றுலா அல்லது வணிக நோக்கத்திற்காக அமெரிக்காவில் 90 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம்.

இந்தக் கட்டணம் July 4 அன்று சட்டமாக மாறிய “One Big Beautiful Bill Act,” என அழைக்கப்படும் Trump நிர்வாகத்தின் செலவுச் சட்டத்தின் ஒரு பகுதியாகும். எனினும் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை அமெரிக்க அரசாங்கம் குறிப்பிடவில்லை.

250 அமெரிக்க டொலர்கள் என வரையறை செய்யப்பட்டுள்ள இக்கட்டணம் ஆண்டுதோறும் பணவீக்கத்திற்கு ஏற்ப மாறுபடலாம் என்றும் சட்டத்தின்படி அது தள்ளுபடி செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Related posts

விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக Air Canada நிறுவனம் JFK விமான நிலையத்திற்கான சேவைகளை நிறுத்துகிறது.

canadanews

NATO வின் ஐந்து சதவீத இலக்கை அடைய புதிய வழியைக் கண்டு பிடித்துள்ள கனடா.

canadanews

Trudeau மற்றும் பிற கூட்டாட்சி தலைவர்களுக்கு online கொலை மிரட்டல்கள் விடுத்ததாக இரண்டு Albertans மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

admin