கனடா செய்திகள்

இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டு போர்க்கப்பல்களை சேவையிலிருந்து விலக்குகின்றது கனேடிய கடற்படை.

Royal Canadian கடற்படை இந்த இலையுதிர்காலத்தில் அதன் பழைய போர்க்கப்பல்களில் சிலவற்றை ஓய்வு பெற திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில், Halifax மற்றும் Esquimalt ஆகிய தளங்களில் நடைபெறவுள்ள “paying off” விழாக்களின் பின்னர் கடற்படை அதன் 12 Kingston-class கப்பல்களில் எட்டு கப்பல்களை சேவையிலிருந்து நீக்கவுள்ளதாக வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.

அதிகாரப்பூர்வமாக கடல்சார் கடலோர பாதுகாப்பு கப்பல்கள் என்று அழைக்கப்படும் இந்த சிறிய கப்பல்கள் 1990 களில் கட்டமைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டவையாகும். ஒவ்வொன்றும் 55 மீட்டர் நீளம், சுமார் 970 தொன் எடை மற்றும் சுமார் 40 பேர் கொண்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது.

Kingston-class இழப்பின் விளைவாக கடற்படைக்கு எந்த திறன் இழப்பும் இல்லை என்று தேசிய பாதுகாப்புத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. diesel-electric மோட்டார்களால் இயக்கப்படும் இந்தக் கப்பல்கள், முதன்மையாக கடலோர ரோந்து, தேடல் மற்றும் மீட்பு, சட்ட அமுலாக்கம், கண்ணிவெடி கண்டறிதல் மற்றும் பயிற்சி ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

சேவையிலிருந்து நீக்கப்படும் இக்கப்பல்களின் பணிகளை மேற்கொள்ள கடற்படை மாற்று வழிகளை கையாள்வதில் வெற்றி கண்டுள்ளதுடன், புதிய கப்பல்களை சேவையில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சுமார் $22.2 பில்லியன் செலவில் Irving Shipbuilding Inc. எனும் கப்பல் கட்டும் தளத்தில் மூன்று கப்பல்களை கட்டும் முயற்சியில் கனடா ஈடுபட்டுள்ளது. இது
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் கனடா மேற்கொள்ளும் பாரிய முயற்சியாகும்.

கடற்படையின் செயற்பாட்டிலுள்ள மீதமுள்ள நான்கு Kingston-class கப்பல்களும் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளன. Royal Canadian Navy எதிர்காலத்தை நோக்கி நாம் நகரும்போது, இந்தக் கப்பல்களின் சேவையை நான் அங்கீகரிக்க விரும்புகிறேன், அத்தோடு அவற்றில் பயணம் செய்த அனைவருக்கும் எனது மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கடற்படையின் தளபதி Vice-Admiral Angus Topshee தெரிவித்துள்ளார்.

Related posts

நவம்பர் 3ம் திகதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், கனடா தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வாக்களிக்கின்றனர்

admin

மூன்று தொகுதிகளுக்கு April மாதம் இடைத்தேர்தல். பிரதமர் Mark Carney அறிவிப்பு.

canadanews

Bank of Canada வின் 3% சதவீத வட்டி விகிதக் குறைப்பை மேற்கொண்டுள்ளது.

canadanews